நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்

 வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ட்ரோன் ஒன்றை முதலை கவ்விய வீடியோவை கூகுள் நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ளார்.


அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்கிளாட்ஸ் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் நீரோடைக்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, நீருக்குள் முதலை இருப்பதைக் கண்ட அவர்கள், டிரோன் மூலம் அதனை வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளனர். அவர்கள் அனுப்பிய ட்ரோனாது, கரைக்கு அருகாமையில் நீரில் இருந்த முதலைக்கு அருகில் இருந்தவாறு வீடியோ எடுத்துள்ளது.

ஒருவித ஒலியுடன் நீண்ட நேரம் டிரோன் அருகில் இருந்ததால், முதலை திடீரென அந்த டிரோவை கவ்வி விழுங்கியது. உணவு என நினைத்தா? என தெரியவில்லை. அந்த ட்ரோனை கவ்விய சிறிது நேரத்தில் முதலையின் வாயில் இருந்து குபுகுபுவென புகை வெளியேறியது.

கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், முதலை டிரோன் கேமராவை கவ்வியதை மற்றொரு கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோவை கூகுள் நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். யூடியூப்பிலும் இந்த வீடியோ டிரெண்டிங்கானது.


டிரோன் மூலம் படம்பிடித்தவர் பேசும்போது, "நீருக்குள் முதலை இருந்ததை தொலைவில் இருந்து பார்த்தோம். அருகில் சென்று பார்க்கும்போது எங்களுக்கு வியப்பாக இருந்தது. பின்னர், டிரோன் கேமரா மூலம் முதலையை படம்பிடிக்க நினைத்தோம். நாங்கள் அனுப்பிய டிரோன் முதலைக்கு அருகாமையில் சென்று படம்பிடித்துக் கொண்டிருந்தது. முதலையின் வாய் பகுதிக்கு அருகாமையில் டிரோனை நகர்த்தும்போது, அதனை திடீரென கவ்வியது. நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கரையில் இருந்த நாங்கள் கூச்சலிட்டோம்.

சிறிது நேரத்தில் முதலையின் வாயில் இருந்து குபுகுபுவென புகை கிளம்பியது. முதலைக்கு ஏதேனும் ஆகிவிட்டதா? என அஞ்சினோம். ஆனால், முதலை கவ்விய டிரோனை நீருக்குள் துப்பியது" எனத் தெரிவித்தார். கிறிஸ் ஆண்டர்சன் என்பவர் பகிர்ந்த இந்த வீடியோவை சுந்தர் பிச்சை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தார். யூ டியூப்பில் மட்டும் சுமார் 2.50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. முதலையின் வாயில் டிரோன் வெடித்த இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


சுற்றுலாப் பயணிகள் தங்களின் வரம்புகளை மீறி செயல்படுவதால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என விலங்குகள் நல ஆர்லவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும்போது, விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கும் வரமுறைகளை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்



Also read : அட “தம்மாத்துண்டு” மேட்ட கடக்க எவ்வளவு போராட்டம்! – குட்டி யானையின் வைரல் வீடியோ

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்