நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வேகமாக வந்த கார்; இருபுறமும் பார்க்காமல் ஓடி வந்த சிறுவன்… கண் இமைக்கும் நொடி தான்… – த்ரில் வீடியோ

 ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை ட்விட்டரில் பார்வையிட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர்.

சாலைகளை கடக்கும் போது எவ்வளவு தான் பாதுகாப்பாக இருக்க முயன்றாலும் சில நேரங்களில் விதி வலியதாக செயல்பட்டுவிடும். சில நேரங்களில் நம்முடைய நல்ல நேரம் நாம் நூலிழையில் உயிர் பிழைத்திருப்போம். இப்படியான உறைய வைக்கும் நிகழ்வுகள் வீடியோவாக சி.சி.டி.வியில் பதிவாவதும், பிறகு சமூக வலைதளங்களில் வைரலாவதும் நம் அன்றாட நிகழ்வில் ஒன்று போல் மாறிவிட்டது.

தன்னுடைய வீட்டுக் கதவை தாத்தா ஒருவர் மறதியாக திறந்து வைத்துவிட்டு செல்ல, வெளியே ஓடிய சிறுவன், வலது புறம் வரும் காரை பார்க்காமல் வேகமாக ஓடினான். அப்போது இடது பக்கத்தில் இருந்து சென்ற குப்பை சேகரிக்கும் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர், சற்றும் யோசிக்காமல் அந்த சிறுவனை கையைப்பிடித்து இழுத்து மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை ட்விட்டரில் பார்வையிட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்தும் அந்த பணியாளரின் துரித முடிவு குறித்தும் பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்ததோடு, அவரின் துணிவை பாராட்டியும் உள்ளனர்.

also read : 

சரியான தூங்குமூஞ்சியா இருக்கும் போல… குட்டிப் புலியின் க்யூட் வீடியோ


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்