சரியான தூங்குமூஞ்சியா இருக்கும் போல… குட்டிப் புலியின் க்யூட் வீடியோ
- Get link
- X
- Other Apps
தலையை தரையில் வைத்து கண்களை உருட்டி உருட்டி பார்த்த சுமினி, சிறிது நேரத்தில் கண்கள் சொக்க, தூங்கி அப்படியே சரியும் காட்சி மிகவும் க்யூட்டாக இருக்கிறது .
புலிகள் என்றால் கம்பீரம், கொடிய வேட்டை விலங்கு என்ற எண்ணம் தான் நம் பலரின் மனதில் நிலைத்திருக்கிறது. புலிகளும் பூனைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உயிரினங்கள் என்ற எண்ணம் நமக்கு ஒரு வகையில் ஆசுவாசம் கொடுத்தாலும் பல நேரங்களில் நாம் புலிகளை செல்லமாக அழைக்க கூட நினைத்து பார்க்கமாட்டோம்.ஆனால் இங்கே ஒரு குட்டிப்புலி க்யூட்டாக தூங்கி விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவதோடு மட்டும் அல்லாமல், நாம் ஏன் இப்படியான ஒரு அழகான, மிகவும் அழகான புலி ஒன்றை வீட்டில் வளர்த்தால் என்ன என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் டல்லாஸ் வன உயிரினங்களுக்கான பூங்கா ஒன்றில் சுகி மற்றும் கௌசா என்ற சுமத்ரன் புலிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அன்று குட்டி ஒன்று பிறந்தது. ஒரு வார காலமே ஆன இந்த குட்டிப்புலிக்கு சுமினி என்று பெயரிட்டுள்ளனர் பூங்கா அதிகாரிகள்.
இந்தோனேசியாவில் இருக்கும் சுமத்ரன் புலிகளை பாதுகாப்பதற்காக பழங்குடி பெண்களுடன் இணைந்து இயக்கம் ஒன்றை நடத்திய சுமினி என்ற தலைவரின் பெயரையே இந்த குட்டிக்கு சூட்டியுள்ளனர்.
சுமினிக்கு மருத்துவ சோதனை நடத்தும் போது அவள் 2.4 கிலோ கிராம் எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக பூங்கா நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
ஒரு வாரமே ஆன இந்த சுமினி தூங்கி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ள இந்த வீடியோவிற்கு 608க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளன. தலையை தரையில் வைத்து கண்களை உருட்டி உருட்டி பார்த்த சுமினி, சிறிது நேரத்தில் கண்கள் சொக்க, தூங்கி அப்படியே சரியும் காட்சி மிகவும் க்யூட்டாக இருக்கிறது.
also read : ஸ்கூட்டர் மீது படமெடுத்தும் ஆடும் நல்ல பாம்பு; ப்ளாஸ்டிக் கேனில் பிடித்த மனிதர் – வைரலாகும் வீடியோ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment