நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் தனிமையான திமிங்கலம் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் வீடியோ..

 42 ஆண்டு காலமாக சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் திமிங்கலம் தன்னைத் தானே துன்புறுத்தி கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

கனடாவில் 42 ஆண்டுகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கும் திமிங்கலத்தை விடுவிக்க வலியுறுத்தி உலகளவில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கனடாவில் நயகாரா நீர்விழ்ச்சிக்கு அருகில் மரைன்லேண்ட் என்ற கடல்வாழ் பாதுகாப்பு மையம் அமைந்துள்ளது. அங்கு கிஸ்கா என்ற ஓர்க்கா வகை திமிங்கலம் சுமார் 42 ஆண்டு காலமாக சிறைபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. திமிங்கல சரணாலய திட்டத்தின் கீழ் இந்த திமிங்கலம் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்து கடல் பகுதியில் வாழ்ந்த கிஸ்கா, தற்போது கடும் மன உளைச்சலில் இருப்பதாக கருதப்படுகிறது. கடந்த மாதம் சமூக ஆர்வலர் பில் டிமர்சர்லியர் மரைன்லேண்டுக்கு சென்றுள்ளார். அப்போது, கடும் மன உளைச்சலில் இருந்த கிஸ்கா திமிங்கலம், தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் வகையில், சுற்றுச் சுவர்களில் தன் தலையைக் கொண்டு அடிக்கடி மோதியுள்ளது.

இதனைப் படம்பிடித்த அவர், தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்திலும் பதிவிட்டு, திமிங்கலத்தின் நிலை குறித்து விளக்கியுள்ளார். அதேநேரத்தில் மரைன்லேண்ட் பூங்காவில் இருந்து அந்த திமிங்கலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். அவரின் இந்தப் பதிவைப் பார்த்த மற்ற சமூக ஆர்வலர்கள், உலகின் தனிமையான திமிங்கலமாக வசித்து வரும் கிஸ்காவை உடனடியாக பூங்கா நிர்வாகம் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

சிலர் பூங்காவுக்கு நேரடியாக சென்று கிஸ்கா இருக்கும் ராட்ச தண்ணீர் தொட்டிக்கு அருகாமையில் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில், தனிமையான வசிப்பிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் திமிங்கலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும், அதற்கு நேரும் கொடூர சித்திரவதைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிஸ்கா திமிங்கலத்துக்கு தற்போது 44 வயதாகிறது. 1979 ஆம் ஆண்டு பிறந்த இந்த திமிங்கலம் 2 வயதானபோது மரைன்லேண்ட் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அங்கு வந்தபிறகு 5 குட்டிகளை கிஸ்கா ஈன்றுள்ளது. அவை அனைத்தும் மிக குறுகிய காலம் மட்டுமே உயிருடன் இருந்துள்ளன. அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை குட்டி திமிங்கலங்கள் இருந்து, பின்னர் இறந்துள்ளன. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண் திமிங்கலத்தின் துணையும் இன்றி, 10 ஆண்டுகளாக தனிமையில் வசித்து வருகிறது. பொதுவாக, டால்பின் மற்றும் திமிங்கலங்கள் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்பவையாக இருந்தாலும், கிஸ்காவின் அணுகுமுறைகள் முற்றிலும் வித்தியாசமாக உள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மனிதர்களால் அதற்கு மன உளைச்சல் ஏற்படுத்தப்பட்டு, கட்டாயமாக தனிமையில் இருக்குமாறு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். உடனடியாக கிஸ்கா திமிங்கலம் விடுவிக்கப்பட்டு, அதன் உண்மையான வாழ்விடமான ஐஸ்லாந்து பகுதிகளில் மீண்டும் விட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, கிஸ்காவின் நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சமூக ஆர்வலர் பில் டிமர்சர்லியர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மரைன்லேண்ட் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பூங்காவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மரைன்லேண்ட் வழக்கறிஞரின் புகாருக்கு பதில் அளித்துள்ள பில், சட்டப்படி வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்று அறிவித்துள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!