நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கூடைப்பந்து ஆட்டத்தில் தன்னை சேர்க்குமாறு அழைப்பு விடுக்கும் அணில் - இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ

 சமீபத்தில் கரடிகள் கால்பந்து விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் தற்போது அணில் ஒன்று கூடைப்பந்து விளையாடியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அணில் ஒன்று கூடைப்பந்து விளையாடும் ஆட்டக்காரரிடம் இணைந்து விளையாடும் வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.  அதில் கூடைப்பந்து மைதானத்தில் புகுந்த அணில் ஒன்று எவ்வித பயமும் இன்றி அங்கிருந்த பந்தினை உருட்டி விட முயற்சி செய்கின்றது. தனது வாலை வைத்து பந்தினை எதிரில் இருக்கும் நபருக்கு திருப்பி அனுப்புகிறது.

பின்னர் தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளும் படி அருகில் இருந்த விளையாட்டு வீரருடன் சேர்ந்து விளையாடி மகிழ்கின்றது. பார்ப்பதற்கே அணில் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக பலரும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இதே போன்று சமீபத்தில் கரடி ஒன்று கால்பந்து மைதானத்தில் புகுந்து இரண்டு கரடிகள் இணைந்து கால்பந்து விளையாடிய செயல் இணையத்தில் வைரலானது.



அந்த வீடியோவில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த 2 கரடிகள் பந்தினை தூக்கிக்கொண்டு காட்டிற்குள் ஓடியது. ஒடிசாவின் நபரங்க்பூர் மாவட்டத்தில் உள்ள உமார்கோட் பகுதியில் உள்ள சுகிகான் என்ற இடத்தில் இரண்டு காட்டு கரடிகள் கால்பந்து விளையாடுவதைக் கண்டன. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "இது ஒரு விலங்கின் உள்ளுணர்வு. அவர்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கும் எந்தப் பொருளின் தன்மையையும் ஆராய்ந்து கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்" என்று அதிகாரி இது குறித்து கூறியுள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்