விண்வெளியில் நாள் ஒன்றுக்கு எத்தனை முறை சூரியன் உதிக்கிறது; நாசா கூறுவது என்ன..!!
- Get link
- X
- Other Apps
சர்வ தேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையம். இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாசா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) ஒரு ட்வீட்டில் இது தொடர்பான அற்புதமான வீடியோவை வெளியிட்டுள்ளார். விண்வெளி வீரர்கள் வெப்பநிலை வேறுபாட்டை உணர்கிறார்களா என்று ஆச்சரியப்பட்ட ட்விட்டர் பயனர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
விண்வெளியில் வெப்பநிலை வேறுபாடு மிகப் பெரிய அளவில் இருக்கும். சூரிய உதயத்தில், வெப்பநிலை 250 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், சூரிய அஸ்தமனத்தில் -250 பாரன்ஹீட் ஆகவும் இருக்கும். ஆனால் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர், ஏனெனில் அவர்களின் விண்வெளி உடைகள் வெளிப்புற தட்பநிலை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் அல்லது விண்வெளியில் நடப்பதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ALSO READ : சீனாவைச் சேர்ந்த பெண் அங்குள்ள தமிழ்த்துறை மாணவர்களுக்கு கீழடியைப் பற்றி பாடமெடுத்து வருகிறார்.!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment