பணிக்கே செல்லாமல் சம்பளம் வாங்கி வந்த பள்ளியில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் வாயிலாகவும் 13,000 யூரோக்கள் (11 லட்சம்) ஏமாற்றி வாங்கியுள்ளார்.
தான் பணியாற்றி வரும் பள்ளியில் பல்வேறு காரணங்களை கூறி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு சம்பளத்தையும், இதர பலன்களையும் வாங்கிக் கொண்ட ஆசிரியர், வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்து 84 லட்சம் ரூபாய் சம்பாதித்திருப்பது அம்பலமாகி உள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வேறு பல பணிகளையும் பார்த்துக் கொண்டே கடந்த 3 ஆண்டுகளில் பெரும் வருமானம் ஈட்டி தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.
மூன்று ஆண்டுகளில் மொத்தம் சேர்த்து 1095 நாட்கள் உள்ளது. இதில் சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் 312 நாட்கள் வருகிறது. இது தவிர்த்து பொது விடுமுறைகள் என்று கணக்கிட்டால் அது பெரிய பட்டியலாக வரும். ஆனால் பள்ளியில் தான் பார்த்து வந்த கணக்கு ஆசிரியர் பணியிலிருந்து 769 நாட்கள் லீவு என்றால் கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த ஆசிரியர் ஒரு நாள் கூட பணிக்கு சென்றது கிடையாது.
இத்தாலியின் சிசிலி பகுதியைச் சேர்ந்த 47 வயதாகும் அந்த ஆசிரியர் ஒரே நேரத்தில் ஒரே வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு வந்துள்ளார், ஆனால் முறைகேடாக பொய் கூறி இரட்டை வருமானம் பார்த்து வந்துள்ளார்.
அந்த அசிரியர் சிசிலி மாகாணத்தில் உள்ள பொர்டெனோன் எனும் பகுதியில் உள்ள இஸ்டிடூடோ டெக்னிகோ எனும் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். தனது உடல் நிலை சரியில்லை எனவும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஆள் இல்லை என பல்வேறு காரணங்களை கூறி அவர் சுமார் மூன்று ஆண்டுகாலம் விடுமுறை எடுத்து வந்திருக்கிறார்.
தனது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அவ்வப்போது மருத்துவ சான்றிதழ்களையும் அவர் சமர்ப்பித்து வந்திருக்கிறார். இதன் மூலம் சம்பளத் தொகையையும், குழந்தைகளின் மருத்துவச் செலவு என காரணம் காட்டி பெரும் தொகையையும் அவர் பணியாற்றி வந்த அந்த பள்ளியில் இருந்து பெற்று வந்திருக்கிறார்.
அந்த கணித ஆசிரியரின் செயலால் சந்தேகமடைந்த அவருடைய பள்ளி ஆசிரிய சகாக்கள் இது குறித்த உண்மை நிலையை அறிய காவல்துறையின் உதவியை நாடினர். இதன் பின்னர் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
அந்த ஆசிரியர் தான் பணியாற்றி வரும் பள்ளியில் பொய் காரணங்களை கூறிக் கொண்டே, நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வேறு சில இடங்களில் கன்சல்டண்டாக பணியாற்றி சுமார் 84 லட்ச ரூபாய் வரை சம்பாதித்துள்ளதும், தெரியவந்தது.
போலீசார் அந்த ஆசிரியரின் உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்த நாட்களில் அவருடைய நடமாட்டங்களை கண்காணித்த போது அவர் பயணம் மேற்கொண்டது தெரியவந்தது. அவருடைய ஓட்டல் புக்கிங்குகள், சுங்கச்சாவடி கட்டணங்கள் வாயிலாக அவரின் நடமாட்டத்தை உறுதி செய்துகொண்டனர். பல்வேறு நிறுவனங்களில் அவர் 97,000 யூரோக்களை (84 லட்ச ரூபாய்) சம்பாதித்திருப்பது தெரியவந்தது.
இது தவிர தான் பணிக்கே செல்லாமல் சம்பளம் வாங்கி வந்த பள்ளியில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் வாயிலாகவும் 13,000 யூரோக்கள் (11 லட்சம்) ஏமாற்றி வாங்கியுள்ளார்.
தற்போது இந்த மோசடி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த கணித ஆசிரியர் பள்ளியில் இருந்து பெற்ற பணம் முழுவதையும் முடக்கி வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சிசிலி நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என கோரிய கணித ஆசிரியரின் முறையீட்டு மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.
Comments
Post a Comment