நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கப்பட்ட அப்பா-மகன் -Viral Video

 நொய்டா: நொய்டா ஹைரைஸ் சொசைட்டியில், பாதுகாப்பு காவலர்கள் அங்கு வசிக்கும் குடியிருப்பாளரை கொடூரமாக தாக்கியா வீடியோ வைரலானது.


டெல்லி என்சிஆர் பகுதியான நொய்டா செக்டர் 100 இல் அமைந்துள்ள ஹைரைஸ் லோட்டஸ் பவுல்வர்ட் (Lotus Boulevard) சொசைட்டியில் வசிப்பவருக்கும், அங்கு பாதுகாவலராக வேலை பார்க்கும் ஒருவருக்கும் ஒரு சிறிய பிரச்சனைக்காக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அங்கு வந்த பத்து, பதினைந்து பாதுகாவலர்களால் குடியிருப்பாளர் கொடூரமாக தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளன சுரேஷ் குமார் என்ற அந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதுகாவலர் மற்றும் அடுக்குமாடி பாதுகாப்புப் பொறுப்பாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செக்டர் -39 காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே நேரத்தில், 10 செக்யூரிட்டி பணியாளர்களிடம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். "பாதுகாவலர் ஸ்ரீகாந்த் சுக்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு பொறுப்பாளர் அம்லேஷ் ராய் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

செக்யூரிட்டி பணியாளரை அறைந்த குடியிருப்புவாசி:

மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள அறையின் சாவியை கொண்டு வருமாறு சுரேஷ் குமார் ஒரு செக்யூரிட்டி பணியாளரிடம் கேட்டுள்ளார். சாவி கொடுக்க முடியாது. இந்த மின் மீட்டர்கள் அறையில் செல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை என செக்யூரிட்டி கூறியுள்ளார். இதன்பிறகு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்புவாசியான ​​குமார் செக்யூரிட்டி பணியாளரை அறைந்ததாகக் கூறப்படுகிறது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செக்யூரிட்டி பணியாளரை அறைந்ததால்,  அவருடன் சேர்ந்து சுமார் ஒரு டஜன் செக்யூரிட்டி பணியாளர்கள் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்புவாசி குமாரை தாக்கியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி கூறினார். 

ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய செக்யூரிட்டி பணியாளர்கள்:

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தின் வீடியோ, செக்யூரிட்டி பணியாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புவாசியை ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கும் காட்சியை காணலாம். கூட்டமாக சேர்ந்து பலர் தாக்கும் போது சுரேஷ்குமார் "முஜே அவுர் மரோ" (அடியுங்கள், என்னை இன்னும்  அடியுங்கள்) என்று கூறிக்கொண்டு வெளியே வருவதையும் பார்க்க முபியும். பின்னர் அவர் ஒரு கட்டையை எடுத்து ஒரு செக்யூரிட்டியை அடிகிறார். இதன் பின்னர் செக்யூரிட்டி பணியாளர்கள் அவரை மீண்டும் தாக்குகிறார்கள்.

நொய்டா கூடுதல் டிசிபி ரன்விஜய் சிங் கூறுகையில், 'பாதுகாப்பு காவலர்கள் குடியிருப்பாளரை கொடூரமாக தாக்கியது தெளிவாகத் தெரிகிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


ALSO READ : Work From Home பரிதாபங்கள்; கணவர் ஆபீஸ் வர அனுமதியுங்கள் என கெஞ்சும் மனைவி..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்