நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Work From Home பரிதாபங்கள்; கணவர் ஆபீஸ் வர அனுமதியுங்கள் என கெஞ்சும் மனைவி..!!

 வொர்க் ப்ரம் ஹோம் பரிதாபத்தை விளக்கும் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் ட்விட்டர் பதிவு மிகவும் வைரலாகியுள்ளது.


கொரோனா நாம் வேலை செய்யும் முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது. இது சில வரமாக அமைந்தாலும், சிலருக்கு அது சாபமாகி விட்ட பரிதாபங்களும் உண்டு. ஆம்.. இதனால், மிக மோசமகா பாதிக்கப்பட்ட ஒரு பரிதாப பெண்மணி தனது கணவரை அலுவலகத்திற்கு வர அனுமதிக்க வேண்டும் என அவரது பாஸிடம் கெஞ்சி கேட்கும் பதிவு மிகவும் வரைலாகி வருகிறது.  

RPG குழுமத்தின் தற்போதைய தலைவரான ஹர்ஷ் வர்தன் கோயங்கா இது குறித்து செய்த ட்விட்டர் பதிவு மிகவும் வைரலாகியுள்ளது. அவர் தனது பதிவில், தனது கணவர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், வேலை செய்யும் போது முழு கோவிட் நெறிமுறைகளை பராமரிபார் என தான் உறுதி அளிப்பதகாவும்  கூறும் ஒரு மனைவியில் புலம்பலை பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பெண் தனது கணவனின் இடைவிடாத நச்சரிப்பால் மிகவும் பாதிக்கபட்டுள்ளதகாவும், அடிக்கடி காபி வேண்டும் ஸ்நாக்ஸ் வேண்டும் என நச்சரிப்பதாகவும் புலம்பியுள்ளார்.அதோடு, அவர் அங்கே இங்கே என பொருட்களை வைத்த இடத்தில் வைக்கமால், வீட்டை நாசமாக்குவதாகவும், தன்னால் வீட்டை சுத்தமாக பராமரிக்க முடியவில்லை எனவும் புலம்பியுள்ளார். 

அது மட்டுமல்லாமல், அந்த பெண்மணி ஏற்கனவே, எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது குழந்தையாக இருக்கும் கணவரை பார்த்துக் கொள்வது பெரும் சுமையாக இருக்கிறது என புலம்பியுள்ளார். மேலும், ஆன் லைன் கால் சமயத்தில் கணவர் தூங்கி விடுகிறார் எனவும் புகார் அளித்துள்ளார்.

வொர்க் ப்ரம் ஹோம் பரிதாபத்தை விளக்கும் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் ட்விட்டர் பதிவு மிகவும் வைரலாகியுள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் ட்விட்டர் பதிவை 5,300 க்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் 480 க்கும் மேற்பட்டவர்கள் ரீட்வீட் செய்துள்ளனர்.


ALSO READ : குடித்தால் கிளுகிளுப்பு; தடவினால் பளபளப்பு - வியக்க வைக்கும் 'Wine'

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்