நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாம்பு மசாஜ் செய்யும் திக் திக் வீடியோ: தைரியம் இருந்தா மட்டும் பாருங்க!!

 பாம்பு மசாஜ் செய்யப்படும்போது, ஒரு நபரின் உடலில் டஜன் கணக்கான பாம்புகள் விடப்படுகின்றன. பின்னர் அந்த நபரின் உடலில் பாம்புகள் ஊர்ந்து மசாஜ் செய்கின்றன. 


உடல் சோர்வைப் போக்க மக்கள் மசாஜ் செய்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு பதில் பாம்புகள் மசாஜ் செய்தால் எப்படி இருக்கும்? இந்த வினோத உலகில் அப்படியும் நடக்கிறது.

எகிப்து  தலைநகர் கெய்ரோவில் உள்ள ஸ்பாவில் இப்படித்தான் நடக்கிறது. இங்கு மசாஜ் கைகளால் அல்ல, பாம்புகளால் செய்யப்படுகிறது. இது பாம்பு மசாஜ் (Snake Massage) என்று அழைக்கப்படுகிறது.

முதுகில் டஜன் கணக்கான பாம்புகள் விடப்பட்டுகின்றன

பாம்பு மசாஜ் செய்யப்படும்போது, ஒரு நபரின் உடலில் டஜன் கணக்கான பாம்புகள் விடப்படுகின்றன. பின்னர் அந்த நபரின் உடலில் பாம்புகள் ஊர்ந்து மசாஜ் செய்கின்றன. எனினும், இந்த பாம்பு மசாஜ் செய்யப்படும்போது பலர் மிகவும் பயந்துவிடுகிறார்கள்.

பாம்பு மசாஜில் இந்த பாம்புகள் பயன்படுத்தப்படுகின்றன

பாம்பு மசாஜில் விஷ பாம்புகள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஷம் இல்லாத பாம்புகள் மட்டுமே மசாஜ் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் இந்த பாம்புகளால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை.

ஆகையால் இந்த மசாஜ்  பாம்புகளைக் கண்டு மக்கள் முதலில் அச்சப்பட்டாலும், பின்னர் அவர்கள் பழகிக்கொள்கிறார்கள். இந்த பாம்புகள் உடம்பில் ஊர்ந்து செல்லும்போது உடலுக்கு ஓய்வு கிடைக்கும்.

பாம்பு மசாஜ் செய்வதற்கு முன் இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்படுகிறது

இதயம் பலவீனமானவர்கள் பாம்பு மசாஜ் செய்யக் கூடாது என்று பாம்பு மசாஜ் செய்வதற்கு முன் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூட்டு வலியிலிருந்து பாம்பு மசாஜ் நிவாரணம் அளிப்பதாக கெய்ரோவில் உள்ள ஸ்பா கூறுகிறது. அதுமட்டுமின்றி இதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

பாம்பு  மசாஜ் சுமார் அரை மணி நேரம் செய்யப்படுகிறது. முதலில் மசாஜ் செய்யப்படும் நபரின் முதுகில் எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்யப்படுகிறது. இதற்குப் பிறகு, அந்த நபரின் முதுகில் பாம்புகள் விடப்படுகின்றன. அவை ஊர்ந்து மசாஜ் செய்யத் தொடங்குகின்றன. இந்த பாம்புகளுக்கு வாடிக்கையாளரை கடிக்காத வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பாம்பு மசாஜ் செய்துகொண்ட நபர் ஒருவர், மசாஜ் செய்த பிறகு தனக்கு  அதிக அளவில் நிவாரணம் கிடைத்ததாக கூறினார். பாம்புகளைக் கண்டு முதலில் சிறிது பயந்தாலும் பின்னர் நிம்மதி அடைந்ததாக அவர் தெரிவித்தார். இப்போது அவருக்கு பாம்பைப் பார்த்தால் பயம் இருப்பதில்லை என்றார் அவர்.


also read : டால்பினுடன் ஆறு மாதங்கள் ‘உறவில்’ இருந்த விசித்திர மனிதர்..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!