நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கல்யாண சமையல் சாதம்! வைரலாகும் லைவ் கடோத்கஜன்!

 கல்யாண சமையல் சாதம்! காய்கறிகளும் பிரமாதம் என்ற பாடலை ஒருமுறையாவது கேட்காதவர்கள் இருக்க முடியாது. 1957ஆம் ஆண்டு வெளியான மாயாபஜார் படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல் உலகப்புகழ் பெற்றது.


கல்யாண சமையல் சாதம்! காய்கறிகளும் பிரமாதம் என்ற பாடலை ஒருமுறையாவது கேட்காதவர்கள் இருக்க முடியாது. 1957ஆம் ஆண்டு வெளியான மாயாபஜார் படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல் உலகப்புகழ் பெற்றது.

இந்தப் பாடலுக்கு எஸ்.வி.ரெங்கா ராவ் கடோத்கஜனாக அருமையாக நடித்திருப்பார்.  “கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்” எனத் தொடங்கும் அந்தப் பாடல், திருமண வீடுகளில் ஒலிப்பது வழக்கம்.

ஒரு காலத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல், தற்போது வேறொரு வடிவம் எடுத்திருக்கிறது. திருமண விருந்தில் (Weddiing Feast) எஸ்.வி.ரெங்கா ராவ் போல வேடமிட்ட ஒருவர் அந்த பாடலுக்கு அபிநயம் பிடிக்கும் வீடியோ, வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த புராண திரைப்படம் எஸ்.வி. ரங்கா ராவின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்பது குறிப்ப்டத்தக்கது.

அதிலும், அந்த நடிகர், கல்யாண சமையல் சாதம்... ஹஹஹஹஹஹ... என்று சொல்லும்போது அங்கு நிற்பவர்களின் கால்களும் தானாகவே தாளம் போடுவதைக் காண முடிகிறது.

வைரலாகும் இந்த திருமண வீடியோவில், பஃபே எனப்படும் விருந்துக் கூடத்தின் நடுவே ஒரு மேஜை மீது ஒருவர் நின்றுக் கொண்டு பாடலுக்கு அபிநயம் பிடிக்கிறார். பொருத்தமான இடத்திற்கு உகந்த பாடல் என்று அனைவரும் பாராட்டுகிறார்கள்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்