ஆண்களின் உடல் வலிமைக்கு சஞ்சீவியாக இருக்கும் உணவுகள்!
- Get link
- X
- Other Apps
ஸ்டாமினா என்பது உங்கள் உடலின் செயல்படும் திறன். எவ்வளவு நீண்ட நேரம் ஆற்றல் நீடித்து உள்ளதோ, அந்த அளவிற்கு அதிக ஸ்டாமினா இருப்பதாக கருதப்படுகிறது.
நீங்கள் அடிக்கடி களைப்பாகவோ, அல்லது சோர்வாகவோ அல்லது சோம்பலாகவோ உணர்ந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்த அறிகுறிகள் அனைத்தும் உடல் வலிமை குறைவாக இருப்பதால் தோன்ற ஆரம்பிக்கின்றன. நாளடைவில் உடல் வலிமை குறைவது இயல்புதான் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். உடல் வலிமை குறைவதால், பலவீனம், மந்தம், சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
உடல் வலிமை அல்லது ஸ்டாமினா என்றால் என்ன
ஸ்டாமினா என்பது உங்கள் உடலின் செயல்படும் திறன். எவ்வளவு நீண்ட நேரம் ஆற்றல் நீடித்து உள்ளதோ, அந்த அளவிற்கு அதிக ஸ்டாமினா இருப்பதாக கருதப்படுகிறது.
மருத்துவர்கள் கூறுவது என்ன
நாட்டின் பிரபல ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி இது குறித்து கூறுகையில், உங்கள் உடலில் போதிய ஸ்டாமினா அல்லது வலிமை இல்லை என்றால், நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்வீர்கள் என்கிறார். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு போன்று, உடல் வலிமையை அதிகரிக்க பல வழிகள் உள்ளன.
உடல் வலிமையை அதிகரிக்க முக்கிய குறிப்புகள்
உடல் வலிமையை அதிகரிக்க உடற்பயிற்சி சிறந்த வழியாகும். தொடர்ந்து பயிற்சி செய்தால் ஸ்டாமினாவை எளிதாக அதிகரிக்கலாம். எப்போதும் சத்தான உணவுகளை உண்ணுங்கள். இதற்கு, கார்போஹைட்ரேட்டுகளை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவை உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். துரித உணவுகள் மற்றும் இனிப்பு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஸ்டாமினாவை அதிகரிக்க, நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது இளநீர், எலுமிச்சைப்பழம் போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
ஸ்டாமினா குறைவதற்கான காரணம்
தூக்கம் இல்லாமை
தண்ணீர் பற்றாக்குறை
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை
இரும்புச்சத்து, புரதச்சத்து குறைபாடு.
உடல் வலிமை குறைந்ததற்கான அறிகுறிகள்
படிக்கட்டுகளில் ஏறும் போது சோர்வாக உணர்தல்
சிறிது தூரம் நடந்தாலே சோர்வடைதல்
நீண்ட நேரம் வேலை செய்ய இயலாத நிலை
பசியின்மை
மயக்கம்
சில நேரங்களில் கண்கள் மங்கலாதல்
கைகள் மற்றும் கால்களில் வலி
ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
உடல் வலிமை குறையத் தொடங்கினால், விரைவில் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஆண்களுக்கு ஸ்டாமினா இல்லை என்றால், அவர்களால் சரியாக உடலுறவு கொள்ள முடியாது, இது அவர்களின் பாலியல் வாழ்க்கையை பாதிக்கிறது.
உடல் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
வாழைப்பழம்
பழுப்பு அரிசி
காபி
ஓட்ஸ்
சால்மன் மீன்
வேர்க்கடலை
வெந்தயம்
குங்குமப்பூ
ஏலக்காய்
கிராம்பு
பூண்டு.
ALSO READ : குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment