நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஓஸ்லா: அழகான வாழ்வியல் கிராமம்

 உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது ஓஸ்லா கிராமம். இந்த நவீன உலகத்திற்கும், அந்தக் கிராமத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அங்கு மொத்தம் 250 குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றன.


எல்லா வீடுகளும் பாறை கற்களால் அடுக்கப்பட்ட மேற்கூரையைக் கொண்டுள்ளன. உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை சாகுபடி கிராம மக்களின் உணவுத் தேவையையும், வாழ்வாதாரத்தையும் காக்கிறது. அதுமட்டுமின்றி அனைத்து கிராமத்தினரும் தங்களது வீடுகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கிராம மக்கள் அனைவரும் பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிகிறார்கள். அதேபோல பெண்களும் பழங்கால அணிகலன்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்தக் கிராமத்தின் வாழ்வியல் முறை வெளியூர் மக்களை பழங்காலத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது.

இதற்காகவே நாடு முழுவதிலும் உள்ள மலையேற்றம் செய்பவர்கள் ஓஸ்லா கிராமத்தில் ‘டிரக்கிங்’ செய்வதை அதிகம் விரும்புகின்றனர். இந்தக் கிராமத்தில் மகாபாரதத்தில் வரும் துரியோதனன் வாழ்ந்ததாக வரலாற்று தகவல்கள் உள்ளன.

மலையின் கீழ் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் செய்ய வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான பாதைகளில் மலையேற்றம் செய்தால் ஓஸ்லா கிராமம் வந்தடைகிறது. அங்கு சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க விடுதிகள் உள்ளன. கிராம மக்கள் வெளியூர் மக்களை கனிவுடன் நடத்துகிறார்கள். கிராம சிறுவர்கள் வெளியூரிலிருந்து வருபவர்களிடம் நட்பு பாராட்டுகின்றனர். கிராமத்தில் உள்ள மரக் கோவில் சிறப்பு இடமாக கருதப்படுகிறது. இவர்களுக்கு என தனிச்சட்டத்தை பின்பற்றி கிராம மக்கள் வாழ்கிறார்கள்.

முழுக்க முழுக்க பண்டைய கால வாழ்க்கையையே வாழ்கிறார்கள். இது போன்று எண்ணற்ற அனுபவங்களை ஓஸ்லா கிராமத்திற்கு மலையேற்றம் செய்பவர்கள் பெறுகிறார்கள்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்