நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகத்தில் வளரும் முடிகளை எளிதாக அகற்றலாம்

 சில இயற்கை குறிப்புகளை பயன்படுத்தி முகத்தில் உள்ள முடிகளை எளிய வழியில் நீக்குவதோடு, மென்மையான சருமத்தையும் பெற முடியும்.


பருவம் அடைந்த பெண்கள் சிலரின் கன்னங்கள், உதட்டிற்கு மேற்பகுதியில் சிறு முடிகள் காணப்படும். மரபியல் மற்றும் ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணமாகும். முகத்தில் வளரும் முடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் அதிகம் பேர் உள்ளனர்.

இந்த முடிகளை நீக்குவதற்காக அவர்கள் பல 
வழிகளை கையாள்கிறார்கள். அவற்றில் ரசாயனங்
களைக் கொண்டு தயாரித்த அழகுப் பொருட்கள், ஷேவிங், வாக்சிங், திரெட்டிங் போன்ற முறைகளால் முடியின் வேர்கள் சேதம் அடைந்து, நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.   

சில இயற்கை குறிப்புகளை பயன்படுத்தி முகத்தில் உள்ள முடிகளை எளிய வழியில் நீக்குவதோடு, மென்மையான சருமத்தையும் பெற முடியும்.

 முட்டையின் வெள்ளைக்கருவுடன், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூச வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தேய்த்துக் கழுவுவதன் மூலம், முகத்தில் இருக்கும் சிறு முடிகள் நீங்கிவிடும். இவ்வாறு வாரம் ஒரு முறை என்ற ரீதியில், தொடர்ந்து ஆறு 
வாரங்கள் செய்து வந்தால் முடிகள் முழுவதும் நீங்கி முகம் பளிச்சிடும்.

 1 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளுடன், காய்ச்சிய பால் சிறிதளவு சேர்த்து, பசை போல கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகம் 
மற்றும் உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிப்பதன் மூலம் உடலில் உள்ள சிறு முடிகள் உதிர்ந்து விடும்.

 இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பழச் சாறுடன், சம அளவு தேன் கலந்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசவும். மறுநாள் காலை குளிக்கும்போது முகத்தை நன்றாக மசாஜ் செய்து விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம், முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.

 ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைப்பயறு மாவுடன், சிறிதளவு வேப்பிலைச் சாறு, குப்பைமேனி இலைச் சாறு, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து, முகத்தில் பேக் போல பூசிக் கொள்ளவும். அரை மணி நேரம் கழித்து படிகாரக் கல்லைக்கொண்டு, முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கும்.

 பப்பாளிப் பழம் இரண்டு துண்டு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் தயிர் இவை மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை நீரால் கழுவவும். முகத்தில் உள்ள முடிகளை நீக்க இந்த முறையை தொடர்ந்து செய்து வரலாம்.

மேற்கூறிய இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி முடிகளை அகற்றிய பின்பு கற்றாழை ஜெல்லை முகம் முழுவதும் பூசிக் கொள்ளலாம். இதன் 
மூலம் சருமம் ஈரப்பதமாகவும், மென்மையாகவும் இருக்கும். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்