நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காது கேளாத தந்தையுடன் முதல் முறையாக சைகை மொழியில் பேசும் மகள்; “க்யூட் வீடியோ” – நெகிழும் நெட்டிசன்கள்

 முதன்முறையாக சைகை மொழியில் தன்னுடைய மகள் பேசியதை நினைத்தும் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் மேடியின் தந்தை.


பிறந்து 19 மாதங்களே ஆன மேடிசன் என்ற பெண் குழந்தையின் தந்தை ஒரு மாற்று திறனாளி. சைகை மொழி மூலமே தன்னுடைய கருத்துகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். தன்னுடைய மகள் மேடிசனுடன் தந்தை ஜச்சாரி சமீபத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்பாவிற்கு முன்னாள், கையில் இரண்டு பொருட்களை வைத்த வண்ணம் நடந்து சென்ற மேடிசன் திடீரென கையில் இருந்த பொருட்களை கீழே வைத்துவிட்டு, தந்தையைப் பார்த்து சைகை மொழியில், அங்கே ஒரு குட்டிப்பாப்பா அழுது கொண்டிருக்கிறாள் என்று மேடிசன் கூறியுள்ளார்.

மேடிசனுக்கு காதுகள் நன்றாக கேட்கும். ஆனாலும் தன்னுடைய தாயும் தந்தையும் உரையாடிக் கொள்ளும் பழக்கத்தை பார்த்து நிறைய கற்றுக் கொண்ட மேடிசன் தக்க நேரத்தில் தன்னுடைய தந்தையிடம் அருகில் என்ன நடக்கிறது என்பதை முதன்முறையாக கூறியுள்ளார்.

பல வயது வந்தவர்களும் சைகை மொழியை கற்றுக் கொள்ள திணறும் போது இந்த குட்டிச்சுட்டி உடனே கற்றுக் கொண்டதை குறித்து நெட்டிசன்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போன்று முதன்முறையாக சைகை மொழியில் தன்னுடைய மகள் பேசியதை நினைத்தும் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் மேடியின் தந்தை.


ALSO READ : வேற லெவல் எனர்ஜி… தமிழ் பாட்டுக்கு பெங்களூருவில் டான்ஸ் ஆடிய கேரளப் பெண்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!