நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெறும் வயிற்றில் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர்: எண்ணற்ற அதிசயத்தைக் காணலாம்

 இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரைப் பருகுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.


அந்தவகையில் வெண்டைக்காய் நீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.


வெண்டைக்காய் நீர் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கி உணவு செரிமானத்தை சீராக்கி வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் செய்கிறது. மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வெண்டைக்காய் தண்ணீர் மிகச்சிறந்த பலன்களை கொடுக்கின்றது.

வெண்டைக்காய் நீரை குடிப்பதால் இரத்த செல்கள் உற்பத்தியாகும் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன அவற்றில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும் அதோடு இதில் இருக்கும் ரத்தத்தை அதிகப்படுத்துகிறது.

தொண்டை வறட்சி ஏற்படாமல் தடுக்கின்றது. தொடர் இருமல் வரட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

நமது உடலில் இருந்து அதிகப்படியான மினரல்கள் இதனால் வெளியேறிவிடுகிறது. அதனை சரிகட்ட வயிற்றுப் போக்கினை நிறுத்தும் வெண்டைக்காய் சாற்றை குடிக்கும் போது சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

வெண்டைக்காய் நீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடுத்து பசி உணர்வு சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே பசிக்க ஆரம்பித்து விடும்.

அதிகப்படியான கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றது அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் எந்த பயமின்றி சாப்பிடலாம்.

வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து நாம் எடுத்து வரும்போது அது நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து நமது இதயத்தையும் பாதுகாக்கிறது.


ALSO READ : சருமத்திற்கு அழகு சேர்க்கும் உணவுகள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!