நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகத்திலிருக்கும் கருந்திட்டுக்களை அடியோடு விரட்ட வேண்டுமா? புதினாவை இப்படி பயன்படுத்தி பாருங்க.. நல்ல பயன் கிடைக்கும்!

 பொதுவாக நம்முடைய சருமம் அழுக்கற்ற, கரும் புள்ளிகள், திட்டுக்கள், பருக்கள் அற்ற சுத்தமான சருமமாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். 


அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து ரசாயனங்கள் கலந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். 

ஆனால் இது தற்காலிகமான தீர்வினை தான் தரும். இதனை சரியான முறையில் போக்க இயற்கை முறையில் பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றை இங்கே பார்ப்போம். 

தேவையானவை

  • புதினா இலைகள் 
  • தண்ணீர்

தயாரிக்கும் முறை

  • புதினா இலைகளில் உள்ள மண், அழுக்கு போகும் படி தண்ணீரில் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.

  • இப்பொழுது இந்த இலைகளை 1.5 கப் தண்ணீரில் போட்டு 3-5 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

  • பிறகு அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி வரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை பிரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும்.

  • இந்த புதினா தண்ணீரை பிரிட்ஜில் வைத்து பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் சீக்கிரமே கெட்டுப் போய் விட வாய்ப்பு உள்ளது. 5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பாதுகாக்க முடியும்.

  • இந்த புதினா டோனரை ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து முகத்திற்கு அப்ளே செய்யுங்கள். உங்க சரும அழகை பராமரிக்க இதை காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் பயன்படுத்தலாம்.

பயன்கள்

  • உங்க முகத்தில் உள்ள கருமை நிறத்தை போக்கி உங்க முகத்தை பிரகாசமாக வைக்க இந்த புதினா டோனர் உதவுகிறது. இது பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அகற்றுகிறது.

  • சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்கிறது. எனவே இந்த புதினா டோனரை நீங்களும் பயன்படுத்தி பலனை பெற முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த டோனரை எளிதாக வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம்.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!