நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 'பாஸ்வேர்ட்' என்ன தெரியுமா?-ஆய்வில் ’ஷாக்’ தகவல்!

 இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், மொபைல் போன், டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான ‘பாஸ்வேர்ட்’ மிகவும் அவசியம். 

தை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையில் இந்தியாவில் பொதுவாகவும், பிரபலமாகவும் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் என்ன என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்து சொல்லியுள்ளது NordPass என்ற நிறுவனம். பாஸ்வேர்டுகளை பயனர்கள் நிர்வகித்துக் கொள்வதற்கான சேவையை இந்த நிறுவனம் வழங்குகிறது. 


இந்த நிறுவனத்தின் கூற்றுப்படி ‘password’ என்ற சொல்லை தான் இந்தியாவில் பொதுவாக பலரும் பயன்படுத்துகின்ற கடவுச்சொல் என தெரியவந்துள்ளது. அதே போல  ‘iloveyou’, ‘krishna’, ‘sairam’ மற்றும் ‘omsaira’ மாதிரியான பாஸ்வேர்டுகளையும் இந்தியர்கள் பயன்படுத்தி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. உலக அளவில் ‘12345’ மற்றும் qwerty கீஸ்களின் வேரியேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்ற நிலையில் இந்தியா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. 


abc123, india123, qwerty மாதிரியானவை இந்திய அளவில் பயன்படுத்தப்படும் டாப் 10 பாஸ்வேர்டுகளில் உள்ளன. 



ALSO READ : பிரத்யேகமான ஸ்டிக்கரை வாட்ஸ்அப்பில் உருவாக்க சுலப வழி

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்