நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நிம்மதியா சாப்பிடுங்க... நிஜமா எடை ஏராது

 எடை அதிகரிப்பதைத் தடுக்கும் குறைந்த கலோரி உணவுகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.


எடை அதிகரித்தவுடன், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் உங்கள் உணவைக் கட்டுப்படுத்தினால், உங்கள் அதிகரித்த எடையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். உங்கள் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் குறைந்த கலோரி உணவுகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

எடை அதிகரிப்பு  உணர்வுள்ளவர்களுக்கு அப்பளம் ஒரு சிறந்த வழி. அப்பளத்தில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. பசிக்கும் போது சாப்பிடுங்கள். இதன் மூலம், உங்கள் எடையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். ஆனால் சுட்டு மட்டுமே சாப்பிடுங்கள், பொரிக்க வேண்டாம். இதை காய்கறி ஸ்டஃபிங்குடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

ஓட்ஸ் மற்றும் துருவிய கேரட் கொண்டு செய்யப்படும் இட்லி மிகவும் ஆரோக்கியமானது. மேலும் இதில் மிகக் குறைந்த கலோரி உள்ளது. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பும், அத்துடன் உடல் எடை கூடும் என்ற கவலையும் இருக்காது. இதை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளாமல், மதிய உணவு அல்லது இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

டோக்லாவும் மிகக் குறைந்த கலோரி பொருளாகும். இதை மைக்ரோவேவில் மிக எளிதாக செய்யலாம். காலை அல்லது மாலை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

குறைந்த கலோரி ஸ்நாக்ஸாக முட்டை பொறி மற்றும் வேக வைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிடலாம். இது உங்கள் வயிற்று பிரச்சனைகளை நீக்கி உங்களுக்கு ஆற்றலை தரும். மேலும், இதனால் எடை கூடும் அபாயமும் இருக்காது. பசி எடுக்கும் போதெல்லாம் கவலையின்றி சாப்பிடலாம்.


ALSO READ : குளிர்கால நோய்களை விரட்டும் வெல்ல கலந்த டீ..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்