நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முத்தத்தால் இவ்வளவு நன்மையா! தினமும் முத்தமிடுங்கள்!

 முத்தத்தின் நன்மைகள்: முத்துமுடுவதைப் பற்றிய பண்பாட்டு மதிப்பீடுகள் சமூகத்துக்கு சமூகம் மாறுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பொது இடங்களில் ஆடவர்கள் முத்தமிடுதல் ஆபாசமாகவும், வரம்பு மீறலாகவும் கருதப்படுகிறது. 


முத்தத்தின் நன்மைகள்: 

முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்கள் மீது பதிக்கும் அல்லது உரசும் செயலாகும். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. 

ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. 

முத்துமுடுவதைப் பற்றிய பண்பாட்டு மதிப்பீடுகள் சமூகத்துக்கு சமூகம் மாறுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பொது இடங்களில் ஆடவர்கள் முத்தமிடுதல் ஆபாசமாகவும், வரம்பு மீறலாகவும் கருதப்படுகிறது. முத்தமிடுதலை சாதாரண செயலாக ஏற்றுக்கொள்ளும் பண்பாடுகளிலும் அணுகுமுறைகள் மாறுபடுகின்றன. 

மத்திய கிழக்கு ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஒரே பாலர் (ஆண்-ஆண் அல்லது பெண்-பெண்) உதடுகள் உரசியோ, கன்னங்களில் முத்தமிட்டோ அன்பையும் மதிப்பையும் பறிமாறிக் கொள்வது இயல்பு. 

ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரே பாலர் உதடுகளில் முத்துமிடுதல் பாலியல் நோக்குடன் பார்க்கப்படுகிறது. 

பாசம் காட்டுதல் மன அழுத்தத்தைக் குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முத்தம் என்பது பொதுவாக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து, அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும் என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான உறவு முறைமுத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும்.

முத்தத்தால் சில நன்மைகளும் உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.


also read : பகீர் தகவல்! 5000 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர்..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்