நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோடிக்கணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கும் Youtube குறித்து பலருக்கும் தெரியாத ரகசியங்கள்

 யூடியூப்பில் இன்று பல கோடி வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றது.


யூடியூப் பற்றி பலருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்கள் மற்றும் ரகசியங்கள் குறித்து காண்போம்.

YouTube.com என்ற டொமைன் பிப்ரவரி 14, 2005 ஆம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது.

யூடியூப் தளத்தில் முதன் முதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ Me at the Zoo என்னும் வீடியோ தான். சான் டியாகோ உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இணை நிறுவனர் ஜாவேத் கரீம் [Jawed பதிவேற்றம் செய்தார். இது ஏப்ரல் 23ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் நடந்தது.

அக்டோபர் 9, 2006 ஆம் நாள் யூடியூப் தளத்தை கூகுள் நிறுவனம் 1.65 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2010 மே மாதம் முதல் ஒரு நாளைக்கு 2 மில்லியன் முறை யூடியூப் பார்க்கப்பட்டது.

மார்ச் மாதம் 2013ஆம் ஆண்டில் முதன் முதலாக ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்களை யூடியூப் அடைந்தது.


ஒரு நாளைக்கு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோவை ஒருவர் பார்த்து முடிக்க 82 வருடங்கள் ஆகும். அதுவும் பிறந்தது முதலே ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் பார்த்தால் தான் அதையும் பார்த்து முடிக்க முடியும். அப்படி பார்த்தால் எவராலும் பார்த்து முடிக்க முடியாது.  

யூடியூப்புக்கு ஆண்டுக்கு $15 பில்லியன் வருமானம் வருவதாக கடந்தாண்டு கூகுள் நிறுவனம் தெரிவித்தது.


ALSO READ : வரலாற்று சாதனை! பனிபடர்ந்த அண்டார்டிகாவில், தறையிறங்கிய விமானம்


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்