மனைவிக்கு தாஜ்மஹால் போன்றே வீடு: இந்திய கணவரின் பரிசு
- Get link
- X
- Other Apps
இந்தியாவில் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு தாஜ்மஹாலைப் போன்று வீடு கட்டி பரிசாக அளித்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் கருதப்படும் தாஜ்மஹால் இன்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.மத்தியபிரதேசம் புர்கான்பூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் சோக்சி என்பவரே தனது மனைவி மஞ்சுஷாவிற்கு பரிசளித்துள்ளார்.
எப்பொழுதும் தாஜ்மஹால் குறித்தும், ஏன் நமது நகரத்தில் கட்டப்படவில்லை என்றும் நாளுக்கு நாள் யோசனையில் இருந்த இவர் மனைவிக்கு பரிசாக இவ்வாறு ஒரு வீட்டினை கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளார்.
ஒருமுறை ஆனந்த் மற்றும் அவரது மனைவியும் டெல்லிக்கு சென்ற போது ஆக்ராவில் இருந்த உண்மையான தாஜ்மஹாலை நுணுக்கமாக ஆய்வு செய்துள்ளனர்.
அதன்பின்பே, மேற்கு வங்கம் மற்றும் இந்தூர் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர்களால் இந்த தாஜ்மஹாலை கட்டியுள்ளார்.
சுமார் 3 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டு கட்டப்பட்ட இந்த தாஜ்மஹால் வீட்டில் 4 படுக்கை அறைகள், சமையலறை, ஒரு நூலகம் மற்றும் ஒரு தியான அறை உள்ளது.
அதுமட்டுமின்றி, வீட்டின் உள்ளேயும் வெளியேயும் விளக்குகள் இருப்பதால், உண்மையான தாஜ்மஹாலைப் போலவே வீடும் இருளில் ஒளிரும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த தாஜ்மஹால் வீட்டின் கனவினை நிறைவேற்றியுள்ளாராம்.
ALSO READ : உலகின் 5 மிக விலை உயர்ந்த மதுபானங்கள்: வினோத தகவல்கள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment