நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சர்வதேச பேஷன் ஷோவில் 6 வயது தமிழ் சிறுவன்! யார் இந்த குட்டி பையன் தெரியுமா?

 சர்வதேச பேஷன் ஷோவில் தமிழ் நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவர் கலந்து கொள்ள போகும் தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.



கோவை-ராம்நகர் பகுதியை சேர்ந்த சிவகுமார்- கோமதி தம்பதிக்கு 6 வயதில் ராணா என்கிற மகன் இருக்கிறான். இந்த சிறுவனின் தந்தை துணிக்கடையும், தாயார் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனர்.

கோமதியின் அழகு நிலையத்திற்கு ஓராடை வடிவமைப்பாளர் ஒருவர் வந்துள்ளார். அப்போது சிறுவன் ராணாவை பார்த்த அவர் உங்கள் மகனை ஏன் பேஷன் ஷோவில் பங்குபெற வைக்க கூடாது  என்று கேட்டிருக்கிறார்.

இதுகுறித்த யோசித்த பெற்றோர், தன் மகனை இதில் பங்குபெற வைக்க நினைத்து கோவையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் பங்குபெற செய்தனர்.

தனது 3 வயதிலேயே கலந்து கொண்ட முதல் ஷோவிலேயே சிறுவன் பரிசை வென்றான்.

இதனையடுத்து பெற்றோர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அதனை தொடர்ந்து சென்னை, கோவை, சேலம், பெங்களூரு, கோவா போன்ற இடங்களில் நடைபெற்ற ஜூனியர் பேஷன் ஷோக்களில் ராணாவை பங்குபெற செய்தனர். ராணாவும் அணைத்து போட்டிகளிலும் பரிசை வென்று குவித்தான் .

மேலும் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் மூலம் 13-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.  துபாயில் நடைபெற உள்ள சர்வதேச பேஷன் ஷோவில் இந்த சிறுவன் பங்கு பெற போகிறான்.

இதில் 15 உலக நாடுகளை சேர்ந்த மாடல்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.



ALSO READ : மனைவிக்கு தாஜ்மஹால் போன்றே வீடு: இந்திய கணவரின் பரிசு

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்