நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கண்களை ஏமாற்றும் ‘கல் மீன்’

 கடலின் ஆழம் செல்லச் செல்ல அதில் இருக்கும் சுவாரசியங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும். அத்தனை ஆச்சரியங்களும், அதிசயங்களும், அமானுஷ்யங்களும், ஆபத்துக்களும் நிறைந்ததாக இருக்கிறது, கடல். அப்படி ஒரு ஆபத்தும், ஆச்சரியமும் நிறைந்ததுதான், ‘கல் மீன்.’


பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில் காணப்படும் இவ்வகை மீன்களில், 5 இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் ஆங்காங்கே சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற கலவையில் காணப்படும் இந்த மீன், கல் போன்றே கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும். எனவேதான் இதற்கு ‘கல் மீன்’ என்று பெயர் வந்தது. இதனை ஆங்கிலத்தில் ‘சைனேன் சியா வெருகோசா’ என்கிறார்கள். இந்த மீன், கல் பாறைகளுக்கு இடையில் இருந்தால், அதைக் கண்டறிவது மிகவும் கடினம்.

சுமார் 14 முதல் 20 அங்குலம் நீளம் வரை வளரும் இந்த மீன், அதிகபட்சமாக 3 கிலோ வரை எடை இருக்கும். பெரும்பாலும் கடலின் ஆழ்கடல் பகுதியில் உள்ள பாறைகளின் இடுக்கிலும், பவளப்பாறையை தழுவிய படியும் இருக்கும் இந்த மீன், சில ஆறுகளிலும் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தனியாகத்தான் வசிக்கின்றன.

இந்த கல் மீன் ஒரு ஊன் உண்ணி. சிறிய மீன்களையும், இறால்களையும் உணவாகக் கொள்ளும். இந்த மீன், மெதுவாக நீந்தும் தன்மை கொண்டது. நீருக்கு வெளியே வந்தாலும் சுமார் 20 மணி நேரத்திற்கு உயிரோடு இருக்கும். இது லட்சக்கணக்கான முட்டைகளை இடும். ஆனால் மற்ற மீன்கள் சாப்பிட்டது போக, சொற்ப எண்ணிக்கையில்தான் குஞ்சுகள் வெளிவரும். இந்த மீனின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை.

கல் மீனின் முதுகுப்புறத் துடுப்பு, பதிமூன்று முட்களால் ஆனது. இந்த துடுப்பின் கீழ் பகுதியில் தான், விஷத்தன்மை கொண்ட திரவம் அடங்கிய பை இருக்கிறது. ஆபத்து நேரங்களில் முதுகுப்புற துடுப்பில் உள்ள முட்கள் பெரிதாகி விடும். அதனை மிதிப்பவர்களின் மேல் விஷத் திரவம் இறங்கி ஆபத்தை விளைவிக்கின்றன. இந்த மீன் முட்கள் குத்திய 2 மணி நேரத்தில் மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான வலி உண்டாகும். பின்னர் திசுக்கள் அழுகி, முடக்குவாதம் ஏற்பட்டு, உயிர் பிரிந்துவிடும்.

கல் மீனின் ஒவ்வொரு முட்களுக்கு அடியிலும் சுரப்பிகள் அமைந்திருக்கும். அந்த சுரப்பிகளின் மீது அழுத்தம் ஏற்படும்போது, விஷம் வெளியேறுகிறது. அழுத்தத்திற்குத் தகுந்தாற்போல் விஷத்தின் அளவும் இருக்கும். நன்றாக அழுத்தி மிதித்தால், நிறைய விஷம் ஏறும். கல் மீனின் விஷம் அடங்கிய பை காலியான இரண்டு வாரங்களில் மீண்டும் நிரம்பி விடும்.

இந்த கல் மீன்களை, பல நாடுகள் மீன் கண்காட்சி சாலைகளில் வைத்துள்ளன. இதன் வினோத தோற்றம், பார்வையாளர்களை கவர்வதால், கல் மீனுக்கு அதிக ரசிகர் பட்டாளம் உண்டு. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை மீன்களை உணவாகவும் சாப்பிடுகிறார்கள். மீனை சுத்தம் செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வேக வைத்ததும் அதில் உள்ள விஷத்தன்மை நீங்கி விடுவதாக கூறுகிறார்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!