சிவப்பு மான் முதல் குள்ளப் பன்றி வரை - இந்தியாவில் மட்டுமே இருக்கக்கூடிய 5 விலங்குகள்
- Get link
- X
- Other Apps
அரியவகை விலங்குகள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும், இந்தியாவில் மட்டுமே இருக்கக்கூடிய சில விலங்குகளும் உள்ளன.
அரியவகை விலங்குகள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும், இந்தியாவில் மட்டுமே இருக்கக்கூடிய சில விலங்குகளும் உள்ளன. அழிவின் விளிம்பில் இருக்கும் அந்த விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியவை. எனவே, அத்தகைய அரிய வகை விலங்குகளில் 5 -ஐக் காணலாம்.
1. குள்ளப் பன்றி, அசாம்
பன்றியினத்தை சேர்ந்தது. பன்றி இனங்களிலேயே மிகவும் குள்ளமாக காணப்படும் இது பிக்மி ஹாக் என அழைக்கப்படுகிறது. அசாம் மாநிலம், மனஸ் தேசிய பூங்காவில் பிக்மி ஹாக் பன்றிகளைக் காணலாம். அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இந்த பன்றியினம், தனக்கான வாழிடத்தை தானே அமைத்துக் கொள்பவை. முன்பு இமயமலை அடிவாரத்தில் அதிகம் காணப்பட்டன. காலப்போக்கில் அவை அழிந்து தற்போது 200க்கும் குறைவான பிக்மி ஹாக் பன்றிகளே இருக்கின்றன.
2. சோலை மந்தி, கேரளா
மகாக் என அங்கிலத்தில் அழைக்கப்படும் சிங்கவால் குரங்கு, சோலை மந்தி அல்லது கருங்குரங்கு என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன. வெள்ளை நிறத்திலான பிடரிப் பகுதியின் ரோமங்கள், கருப்பு நிற முகம் இந்த குரங்குகளின் சிறப்பம்சமாகும். சுமார் 3 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருக்கும் இதன் வால் பகுதி மட்டும் சுமார் 25 செ.மீ. நீளம் இருக்கும். 20 முதல் 30 ஆண்டுகள் வரை வாழும். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள செந்தூருணி வனவிலங்குகள் சரணாலயத்தில் இந்த குரங்குகள் காணலாம். தமிழகத்தில் மேட்டுப்பாளையத்தில் பார்க்க முடியும்.
3. சிவப்பு மான், ஜம்மு காஷ்மீர்
அரிய வகை சிவப்பு மான் இனமான இதனை, காஷ்மீர் ஸ்டேக் அல்லது ஹங்குல் என அழைக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் உள்ள தேசிய பூங்காக்களில் மட்டுமே இந்த மான்களை பார்க்க முடியும். கடந்த நூற்றாண்டில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் சிவப்பு மான்கள் காணப்பட்ட நிலையில், தற்போது 150 மட்டுமே இருக்கிறது என கூறப்படுகிறது. இந்தப் பூங்காவில் பனிச்சிறுத்தை, மலை நரி மற்றும் இமயமலை செரோ ஆகிய அரிய விலங்குகளையும் காணலாம்.
4. சங்காய் மான், மணிப்பூர்
மணிப்பூரில் அமைந்துள்ள கெய்புல் லாம்ஜோ தேசிய பூங்காவில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஏராளமான உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது சாங்காய் மான் இனமாகும். நான்கு கொம்புகளைக் கொண்ட இந்த மான் இனத்தைக் காப்பாற்றும் பொருட்டு அந்த மாநிலத்தில் ஆண்டுதோறும், சங்காய் திருவிழா 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
5. நீலகிரி தஹ்ர், கேரளா
காட்டு ஆடு வகையைச் சேர்ந்த நீலகிரி தஹ்ர் மேற்கு தொடர்ச்சி மலையின் வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. வளைந்த கொம்புகள், கரடுமுரடான மற்றும் குறுகிய ரோமங்களுடன், நீலகிரி தஹ்ர் உள்ளன. சுமார் 700 முதல் 800 ஆடுகள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆட்டு இனங்களை கேரள மாநிலம், இறைவிக்குளம் தேசிய பூங்காவில் அதிகம் பார்க்க முடியும். இங்கு, நீல குறிஞ்சி பூக்கள் பெருமளவு பூப்பதையும் கண்டு ரசிக்கலாம்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment