நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Toilet Paper வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன் என தெரியுமா?

 Western Toiletகளில் பெரும்பாலும் காகிதங்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது, இந்த காகிதங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.


இது ஏன் என்று நீங்கள் யோசித்தது உண்டா? வெள்ளையாக இருந்தால் சுத்தமாக இருக்கும் என்றே நாம் நினைப்போம்.

ஆனால் அதற்கு பின்னால் வேறு சில காரணங்கள் இருக்கிறது, அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

மரங்களிலிருந்தோ அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்திலிருந்தோ நேரடியாக வரும் செல்லுலோஸ் இழைகளிலிருந்து Toilet Paper தயாரிக்கப்படுகிறது.

முதல் காரணம்,

Toilet Paper-கள் பளீச்சிங் செய்யப்பட்டு வெண்மையாக்கப்படுகின்றன, பளீச் செய்யப்படாம் இருக்கும் Toilet Paper-கள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இவற்றை வெண்மையாக்குவதற்கு மிகக்குறைந்த அளவே செலவாகும், அதுவே கலர் செய்யப்பட்டால் செலவு பிடிப்பதுடன் Toilet Paperகளின் விலையும் அதிகரிக்கும், எனவே தான் வெண்மையாக்கப்படுகிறது.


இரண்டாம் காரணம்,

ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் குளோரினை பயன்படுத்தி பழுப்பு நிற Toilet Paperகள் ப்ளீச் செய்யப்படுகின்றன, பின்னர் இதிலிருந்து lignin என்ற பொருள் நீக்கப்பட்டு மென்மையாக்கப்படுகிறது.

கலர் Toilet Paperகளை விட வெள்ளை Toilet Paperகள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை, இதுவே சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக பார்க்கப்படுகிறது.

மூன்றாம் காரணம்,

கலர் மற்றும் பிரிண்டிங் செய்யப்பட்ட Toilet Paperகளை ஒரு சில நிறுவனங்கள் தயாரித்தாலும், உடல்நலத்துக்கு கேடானது என்பதால் வெள்ளை நிற Toilet Paperகளை மட்டுமே உபயோகிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் கலர் Toilet Paperகள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


ALSO READ : நீங்கள் உபயோகப்படுத்தும் செல்போன் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!