நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்களின் ஹார்மோன் சுரப்பை சீராக்கும் உணவுகள்

 பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பைச் சீராக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது மக்னீசியம். அவகேடோ, பட்டாணி, சோயா பீன்ஸ், பூசணி விதைகள், முழு தானிய வகைகள் போன்றவற்றில் மக்னீசியம் நிறைந்துள்ளது.


டலில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக விளங்குவது ஹார்மோன்கள். இவை ரத்தத்தின் மூலமாக சமிக்ஞைகளை கொண்டுபோய் உறுப்புகளுக்கு வழங்குபவையாகும். தகவல்களைக் கடத்தி, உறுப்புகள் தங்கள் பணியை ஒழுங்காகச் செய்வதற்குத் தூண்டுவதால் இவற்றை ‘வேதியியல் கடத்திகள்’ என்றும் அழைக்கிறோம். உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன.

ஹார்மோன்களின் சுரப்பு சீராக அமையாதபோது, உடலில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்திலும், கர்ப்பக் காலத்திலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மேலும் உடல் பருமன், முடி உதிர்தல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் சீரற்ற ஹார்மோன் சுரப்பால் ஏற்படுகின்றன. 

ஹார்மோன்களின் சுரப்பை சீராக்குவதற்கு எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

நல்ல கொழுப்பு கொண்ட உணவுப் பொருட்கள் 

ஒரே வகையான சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், அவகேடோ எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சுத்தமான நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்தவற்றைப் பயன்படுத்தலாம். 

வைட்டமின் டி, ஏ, ஈ மற்றும் கே2 கொண்ட உணவுப் பொருட்கள், ஆளி விதை, சியா எனும் சப்ஜா விதை, நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்வதால், உடலில் ஹார்மோன் சுரப்பைச் சீராக்கலாம். மேலும் பாதாம், வால்நட், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை ஹார்மோன்களின் சீரான இயக்கத்திற்குத் தேவையான கொழுப்பு அமிலங்களை கொண்டவையாகும்.

ஆக்சிஜன் அதிகம் உள்ள உணவுகள்
 
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகளான ப்ராக்கோலி, முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். இது பெண்களின் பருவகால வளர்ச்சிக்கும், மாற்றங்களுக்கும் உதவுகிற ‘ஈஸ்ட்ரோஜென்’ எனும் ஹார்மோனின் சீரான சுரப்புக்கு உதவும். மேலும், இந்த உணவுப் பொருட்களில் உள்ள கால்சியம், மாதவிடாய்க்கு முன் ஏற்படும் வலியைக் குறைக்கும்.

மக்னீசியம் நிறைந்த உணவுகள் 

பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பைச் சீராக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது மக்னீசியம். அவகேடோ, பட்டாணி, சோயா பீன்ஸ், பூசணி விதைகள், முழு தானிய வகைகள் போன்றவற்றில் மக்னீசியம் நிறைந்துள்ளது. மஞ்சள், லவங்கப் பட்டைத்தூள், சோம்பு மற்றும் இஞ்சி ஆகிய நான்கையும், நீரில் கொதிக்க வைத்துக் குடித்து வந்தாலும் ஹார்மோன்கள் சீராக சுரக்கும். 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!