நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

19வது மாடி பால்கனியில் இருந்து விழும் 82 வயது பாட்டி! வீடியோ வைரல்

 19வது மாடியில் இருந்து பாட்டி ஒருவர் தவறுதலாக விழுகிறார். அவர் உயிர் பிழைத்ததற்கு சாட்சியாக இந்த வீடியோ வைரலாகிறது...


கேமராவில் எதிர்பாராமல் பதிவாகும் பல விஷயங்கள், ஆச்சர்யத்தைத் தருகின்றன. அதுபோன்ற ஒரு வீடியோ சீனாவில் இருந்து வெளிவந்துள்ளது. கிழக்கு சீனாவில் ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து பாட்டி ஒருவர் தவறுதலாக விழுகிறார். ஆனால் அவர் உயிர் பிழைத்ததற்கு சாட்சியாக இந்த காட்சி வீடியோ வைரலாகிறது.

82 வயதான மூதாட்டி,  துணி உலர்த்தும் ரேக்கில் இருந்து தலைகீழாக தொங்குவதை சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில்  காண முடிகிறது. துணி உலர்த்தும் ரேக்கே, பாட்டி கீழே விழாமல் தடுக்க, பாட்டி ரேக்கில் மாட்டிக் கொண்டு தலைகீழாக தொங்குகிறார். 

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்சூவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்துவிட்டார். துணிகளில் மாட்டிக் கொண்டதால் தான் அவர் உயிர் பிழைத்தார்.

இந்த வைரல் வீடியோவில் , அந்த பெண்ணின் இரண்டு கால்களும் 18வது மாடியில் உள்ள பால்கனியின் துணி ரேக்கில் தொங்குகிறது. 17வது மாடியில் உடல் தொங்குவதைப் பார்க்க முடிகிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புக் குழுவினர் 18வது மாடி மற்றும் 17வது மாடியில் இருந்து அவரை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். 

பாதுகாப்பு கயிறுகளை இணைத்து தீயணைப்பு வீரர்கள் செய்த முயற்சி வெற்றி பெற்றது. 18வது மாடியில் இருந்த ஊழியர்கள் அந்த முதியவரை மேலே இழுக்க, அதே நேரத்தில், 17வது மாடியில் இருந்த மீட்புப் பணியாளர்கள் (Rescue Team) பாட்டியை மேலே தூக்கினார்கள். இறுதியில் பாட்டி வெற்றிகரமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்பதோடு, அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பெண்  ​​பால்கனியின் கயிற்றில் துணி காயப்போடும்போது தவறி விழுந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பாட்டியை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை மக்கள் பாராட்டினர். "தீயணைப்பு வீரர்களின் அற்புதமான வேலை" என்பதே பலரின் பதிவுகளின் ஒரே சாராம்சமாக இருக்கிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்