நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாம்பு Vs பல்லியின் உக்கிரமான சண்டையில் ஜெயித்தது யார்..!!

 பாம்பு என்ற  பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என  தான் கூறுவார்கள்.  ஆனால், அப்படிப்பட்ட பாம்பை ஒரு பல்லி பாடாய படுத்தியது என்றால நம்ப முடிகிறதா...இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வைரல் வீடியோ உங்களுக்காக. 


மூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிறைந்துள்ளது. அதில பகிரப்படும் வீடியோக்கள், ஆச்சர்யத்தை கொடுப்பதகாவும், சில சமயங்களில் அதிர்ச்சியை கொடுப்பதாகவும் உள்ளன.

பாம்பு என்ற  பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என  தான் கூறுவார்கள்.  ஆனால், அப்படிப்பட்ட பாம்பை ஒரு பல்லி பாடாய் படுத்தியது என்றால நம்ப முடிகிறதா... இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வைரல் வீடியோ உங்களுக்காக. 

வைரலாகும் இந்த குறிப்பிட்ட பல்லி மற்றும் பாம்பு சண்டை வீடியோ ( Viral Video) மிகவும் விறுவிறுப்பானதாகவும் இருக்கிறது. இந்த வீடியோவில், பாம்பு பல்லியை எளிதான இரையாக நினைத்து தவறு செய்தது என்பதை உணரலாம். இந்த சண்டை வீடியோவை நெட்டிசன்களும் மிகவும் விரும்பி பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வ்யூஸ்களை பெற்றுள்ளது.

வைரலாகி வரும் சில நொடிகளுக்கான இந்த  வீடியோவில், சுவரில் இரண்டு பல்லிகள் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்ததைக் காணலாம், அப்போது கூரை பகுதி வழியாக உள்ளே நுழைந்த  பல அடி நீளமுள்ள ஆபத்தான பாம்பு அவற்றில் ஒன்றை எட்டிப் பிடித்தது. பாம்பு பல்லியை இரையாக ஆக்க முற்பட்ட போது, ​​மற்றொரு பல்லி மின்னல் வேகத்தில் அதனைத் தாக்கியது. காணொளியில் உள்ள இந்தக் காட்சி மிகவும் வியப்பூட்டுவதாக உள்ளது.

பாம்பு பல்லியை விழுங்க முற்பட்ட போது, சக பல்லி பாம்பைத் தாக்கியதைக் காணலாம். ஒரு வழியாக பாம்பின் கழுத்தை வாயால் கவ்விப் பிடித்தது. இதனால் பாம்பு பிடித்து வைத்திர்ய்ந்த மற்றொரு பல்லியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரு தரப்பினரின் இந்த சண்டை ஒரு சுவரின் மீது நடந்தது என்பது தான் இன்னும் ஆச்சரியம் தரும் விஷயம். கடைசியில் பாம்பு அங்கிருந்து நழுவிச் சென்றது.

வீடியோவை இங்கே பார்க்கலாம்:

ந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இது Instagram இல் royal_pythons என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் அதிக அளவில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


ALSO READ : வைரத்தை தேட சிங்கத்தின் குகைக்குள் நுழைந்த மனிதன்! சிங்கமும் வெயிட்டிங்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்