நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நாகப்பாம்பு vs மலைப்பாம்பு: திக் திக் நிமிடங்கள், கடைசில ஒரு ட்விஸ்ட், வீடியோ வைரல்

 நாகப்பாம்பும் மலைப்பாம்பும் மாறி மாறி ஒன்றை ஒன்று தாக்கிகொள்கின்றன. எனினும், இரண்டாலும் மற்றதை வீழ்த்த முடியவில்லை. 


ணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புன் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது சண்டையில் ஈடுபட்டிருக்கும் இரு பாம்புகளின் வீடியோ அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது. 

இந்த வீடியோவில் ஆபத்தான நாகப்பாம்புக்கும்  பயங்கரமான மலைப்பாம்புக்கும் இடையே நடக்கும் சண்டையை காண முடிகின்றது. இரு பாம்புகளுக்கும் இடையே நடக்கும் இந்த சண்டை இதுவரை கண்டிராத ஒன்றாக இருக்கிறது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், நாகப்பாம்பு தண்ணீரில் நீந்தி முன்னேறிச் செல்வதைக் காண முடிகின்றது. மறுபுறம் பல அடி நீளமுள்ள மலைப்பாம்பு அங்கு வந்து அதை தாக்குகிறது. இதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வு காண்பவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

இந்த அசத்தலான வீடியோவை இங்கே காணலாம்:


இந்த சண்டையில் உயிர் பிழைத்த நாகப்பாம்பு அங்கிருந்து செல்ல முயறிக்கிறது. ஆனால், நாகப்பாம்பை பின்தொடரும் மலைப்பாம்பு  தன் வாயால் அதை கவ்விக்கொள்கிறது. நாகப்பாம்பை உயிருடன் விழுங்க, அதன் உடலை ஒட்டிச் செல்கிறது.

ஆனால், நாகப்பாம்பு அதை விட புத்திசாலியாக இருக்கிறது. தான் தாக்கப்பட்டவுடன் அது, மலைப்பாம்பின் உடலோடு ஒட்டிக்கொண்டு தன் வாய்ப் பகுதியை மறைத்துக்கொள்கிறது.

இதற்குப் பிறகு திரையில் காணும் காட்சிகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

தன் வாய்ப்பகுதியை காத்துக்கொள்ளும் நாகப்பாம்பு பின்னர் மலைப்பாம்பைத் தாக்கியது. எனினும், மலைப்பாம்பு அதைத் தொடர்ந்து தாக்குகிறது. நாகப்பாம்பை அப்படியே விழுங்கிவிட மலைப்பாம்பு முயற்சி செய்கிறது. ஆனால் அதனால் வெற்றி பெற முடியவில்லை.

நாகப்பாம்பை விழுங்க, மலைப்பாம்பு அதன் வாயை இலக்காக வைக்கிறது. ஆனால் நீண்ட சண்டைக்குப் பிறகும் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. நாகப்பாம்பும் மலைப்பாம்பும் மாறி மாறி ஒன்றை ஒன்று தாக்கிகொள்கின்றன. எனினும், இரண்டாலும் மற்றதை வீழ்த்த முடியவில்லை. இரண்டுக்கும் வெற்றி கிடைக்கவில்லை.

பின்னர், இரு பாம்புகளும் தங்கள் சண்டையை கைவிட்டு தங்கள் வழியில் செல்வதையும் வீடியோவின் இறுதியில் காண முடிகின்றது.

நாகப்பாம்பு மற்றும் மலைப்பாம்பின் இந்த வீடியோ, nurhidayat hdy என்ற சேனலால் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் இதற்கு பல வித கமெண்டுகளை தெரிவித்துள்ளனர்.


ALSO READ : பாம்பு Vs பல்லியின் உக்கிரமான சண்டையில் ஜெயித்தது யார்..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்