நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நீங்கள் உபயோகப்படுத்தும் செல்போன் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

செல்போன்கள் என்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

அதன் கட்டமைப்பு நம்பமுடியாத ஆச்சரிய விடயங்களை கொண்டது. 


செல்போனானது கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் உலோகம் போன்ற மிகவும் பொதுவான பாகங்களுடன், பல பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.

கண்ணாடி செல்போனின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே,அதிலும் குறிப்பாக போனின் திரை கண்ணாடியால் ஆனது. ஆனால் இவையாவும் எந்தவொரு பழைய கண்ணாடியாலும் ஆனது அல்ல. இந்த மொபைல் கண்ணாடியானது அலுமினியம் ஆக்சைடு மற்றும் சிலிக்கான் டை ஆக்சைடு-ல் இண்டியம் டின் ஆக்சைடு-ன் மிக மெல்லிய அடுக்கு சேர்த்து உருவாக்கப்படுகிறது. எனவே நீங்கள் அதை சேதப்படுத்தாமல் போன் திரையை தொட முடியும்.

மோட்டோரோலா, சாம்சங் மற்றும் நோக்கியா போன்ற உற்பத்தியாளர்களின் சில ஸ்மார்ட்போன்கள், கொரில்லா க்ளாஸ் எனப்படும் கார்னிங் ஆல் உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் மெல்லிய மற்றும் இலகுரக கடினமான கண்ணாடி திரையை கொண்டுள்ளன. அலுமினிய ஆக்சைடிலிருந்து தயாரிக்கப்படும் ஷப்பயர் என்ற பொருள் கொரில்லா க்ளாஸை விட மூன்று மடங்கு கடினமாக இருப்பதால், சில ஸ்மார்ட்போன்கள் கண்ணாடிக்கு பதிலாக இது பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

அதேநேரம் இந்த விலையுயர்ந்த பொருள் தற்போதைக்கு எந்தவொரு செல்போனிலும் பரவலாக பயன்படுத்தாத நிலையில், ஆப்பிள் அதன் ஐபோன் 5 கேமராவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு ஷப்பயரை பயன்படுத்துகிறது.


செல்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கருத்தில் கொண்டால், இந்த சாதனங்களை குப்பைத்தொட்டிகளில் போடாமல் இருப்பது சிறந்த முடிவு. பல ஆய்வுமுடிவுகளின் படி ஒவ்வொரு வருடமும் 140 மில்லியன் செல்போன்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன.

அவற்றில் மற்ற உலோகங்களுடன் சேர்த்து சுமார் 2,100 மெட்ரிக் டன் காப்பர் மற்றும் 3.9 மெட்ரிக் டன் தங்கம், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிகளை குப்பைக்கு அனுப்பாமல் வைத்திருக்க முடியும்.

உங்கள் பழைய போன்களை குப்பைத்தொட்டியில் போடாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் செல்போன்கள் மறுசுழற்சி மையங்களுக்கு வழங்கலாம்.


நாம் பயன்படுத்தும் செல்போனை உருவாக்க பல்வேறு வகையான உலோகங்கள் தேவைப்படும் நிலையில், பெரும்பாலும் அலுமினியம் உலோகங்களே பயன்படுத்தப்படுகின்றன மற்றும் இலகுரக பொருட்கள் பொதுவாக போன் கேஸில் பயன்படுத்தப்படுகின்றன.


லித்தியம் கோபால்ட் ஆக்சைடு மற்றும் கார்பன் கிராஃபைட் ஆகியவை பேட்டரிகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. தங்கம், செம்பு மற்றும் வெள்ளி போன்றவை தொலைபேசி ஒயர்களிலும், பிளாட்டினம் மற்றும் டங்ஸ்டன் சர்க்யூட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.  


ALSO READ : கோடிக்கணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கும் Youtube குறித்து பலருக்கும் தெரியாத ரகசியங்கள்


 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!