நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தெருக்கடையில் அசத்தலான ஆஃபருடன் தங்க துகள் தூவிய பர்கர்!

 லூதியானாவில் தெருக்களில் உணவு விற்கும் வியாபாரி ஒருவர் தான் தங்க துகள்களை பர்கரில் தூவி விற்று வருகிறார்.


லரும் ஓய்வில்லாமல் ஓடி உழைப்பது மூன்று வேலை உணவிற்காக தான், அத்தகைய உணவுகளில் தற்போது பலரும் பல்வேறு புதுமைகளை புகுத்தி உண்ண தொடங்கி விட்டனர்.  அதற்கேற்றாற் போல ஒவ்வொரு உணவு நிறுவனங்களும், மக்களை கவரும் பொருட்டு புதுவிதமான உணவுகளை அறிமுகப்படுத்த தொடங்கிவிட்டனர்.

அதாவது விலையுயர்ந்த தங்கத்தையே உணவுகளில் கலந்து மக்களுக்கு அளிக்கும் வகையில் புதுமைகள் வளர்ந்துவிட்டது.  பிரியாணி, மோமோஸ், சூப் போன்ற பலவற்றில் தங்க துகள்களை கலந்து பெரிய அளவிலான உணவகங்களில் விற்கப்படுகிறது.  அதுவே ஒரு சிறிய கடையில் இதுபோன்று தங்க துகள் கலந்த உணவு விற்கப்படுவது ஆச்சர்யமான ஒன்று.


லூதியானாவில் தெருக்களில் உணவு விற்கும் வியாபாரி ஒருவர் தான் தங்க துகள்களை பர்கரில் தூவி விற்று வருகிறார்.  அந்த பர்கரோடு சேர்த்து ஒரு அசத்தலான ஆஃபரையும் அறிவித்துள்ளார்.  அதாவது ரூ.1000-த்திற்கு விற்கப்படும் இந்த வெஜ் பர்கரை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு இவர் பரிசாக ரூ.1000-ஐ வழங்குகிறார், மேலும் சாப்பிட்ட பர்கருக்கும் காசு கொடுக்க தேவையில்லையாம்.  



அவ்வாறு சாப்பிட்டு முடிக்கவிட்டால் சாப்பிட்ட பர்கருக்கு மட்டும் காசை கொடுத்துவிட்டு வெறும் கையேடு தான் செல்ல வேண்டும்.  இவரின் இந்த அறிவிப்பால் பலரும் இவரது கடையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.  இவர் இந்த வெஜ் பர்கரை தயாரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.


also read : சொல் பேச்சு கேக்கும் கரடி; மாஸ் வீடியோ


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!