நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இப்படி சகட்டுமேனிக்கு முட்டையிட்டா என்ன அர்த்தம்? வைரலாகும் Mosquito வீடியோ

 கொசுக்கள் முட்டையிடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இந்த வீடியோவைப் பார்த்தால் ஆச்சரியம் மட்டுமல்ல, கொசுக்களின் அதீத அதிகரிப்புக்கு காரணமும் புரியும்.


கொசு முட்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நொடிகளில் கொசு பல முட்டைகளை இடுவதை பார்க்கும்போது வியப்பில் விரியும் விழிகள் இமைக்க மறக்கின்றன.

ஒரு கொசு ஒரே நேரத்தில் 500 முட்டைகளுக்கு மேல் இடும் என்பது புதிய தகவலாக இருந்தாலும், இப்படி பல்கிப் பெருகி தான் மனிதர்களுக்கு நோயை பரப்புகிறாயே கொசுவே, உன் கொசுத்தொல்லை முடியவே முடியாதா என்று கேட்கவும் தோன்றுகிறது.

கொசுக் கடித்தால் கொடிய நோய்  ஏற்படும் அபாயங்களால், பிரச்சனை என்றாலே, கொசுத்தொல்லை என்று சொல்லும் அளவுக்கு கொசுக்கள் மனிதர்களுக்கு பிரம்மாண்ட பிரச்சனையாய் உருவாகியுள்ளன. நம் கைகளுக்குள் அகப்படாமல் லாவகமாக கொசு, நமது உயிரையே கொல்லும் அளவு, நோயை ஏற்படுத்தக்கூடியது என்பது கொசுவின் மீதான பயத்தை அதிகரிக்கிறது.  

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ரெபேக்கா ஹெர்பர்ட் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்து வைரலாக்குகின்றனர்.

 ஆச்சரியம் ஏற்படுத்தும் கொசுவின் பிரசவ வீடியோ இது...

பொதுவாக பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. கொசுக்களுக்கு ரத்தம் முதன்மையான உணவு இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? 

ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபடும் பெண் கொசு, தனது முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே ரத்தத்தைக் குடிக்கிறது. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப ரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறதாம்!

இதற்காகவே, பெண் கொசுக்கள் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கிற இடங்கள் மற்றும்  சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் நீரில் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யகின்றன. கொசுக்களை நாம் தொடர்ந்து அடித்துக் கொன்றுக் கொண்டிருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை இவ்வளவு வேகமாக எப்படி அதிகரிக்கிறது என்ற கேள்வியை நாம் அடிக்கடி கேட்கிறோம்.

தற்போது, கொசுக்கள் முட்டையிடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இந்த வீடியோவைப் பார்த்தால் ஆச்சரியம் மட்டுமல்ல, கொசுக்களின் அதீத அதிகரிப்புக்கு காரணமும் புரியும். கொசு ஒரே நேரத்தில் 500 முட்டைகளுக்கு மேல் இடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

12 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பெண் கொசு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே ஆண் கொசுவுடன் உறவு கொள்கிறதாம்.  ஒரு நேரத்தில் 200 முதல் 500 முட்டைகள் இடும் பெண் கொசுக்களின் ஆயுளும் அதிகம் தான். 

ஆண் கொசுக்களின் வாழ்நாள் 10 நாட்கள் மட்டுமே என்றால், பெண் கொசுக்களின் ஆயுள் 40 முதல் 50 நாட்கள் ஆகும். கொசுக்கடியால் மனிதர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன.  


ALSO READ : அம்மானா சும்மாவா? பருந்தை பந்தாடிய கோழியின் வைரல் வீடியோ


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்