100 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் 'ஆடு' வடிவிலான ரோபோட்!
- Get link
- X
- Other Apps
100 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் “ஆடு வடிவிலான ரோபோட் ஜப்பானில் அறிமுகம் ஆகியுள்ளது.
ஜப்பானில் முதன் முறையாக 4 கால்களுடன், ஆடு வடிவிலான ரோபோட்டை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. பெக்ஸ் (BEX) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோட், 100 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து கொண்டு கரடுமுரடான பாதைகளிலும் செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை தானியங்கி முறையிலும், மனிதர்களின் கட்டுபாட்டின் கீழும் இயக்க முடியும்.
கடந்த 2017-ம் ஆண்டு 2 கால்களுடன் மனிதர்களை போன்று ரோபோட்டை இந்நிறுவனம் இயக்கி இருந்தது. அதில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் தற்போது 4 கால்களுடன் ஆடு வடிவில் இந்த ரோபோட்டை தயாரித்து உள்ளனர்.
இதனை விவசாயப்பணிகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ALSO READ : உணவிலிருந்து சிமென்ட்.. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment