நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிலேயே மிகப்பெரிய விஸ்கி பாட்டில் ஏலத்தில் விற்பனை... விலை எவ்வளவு தெரியுமா.?

 ஸ்காட்ச் ரக விஸ்கியை கொண்ட 5 அடி நீளம், 11 அடி அங்குலம் நீளமுள்ள பாட்டிலைஉலகிலேயே மிகப்பெரிய விஸ்கி பாட்டில் 1.1 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.


ஏலத்தை பொறுத்தவரை திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பயன்படுத்திய ஆடைகள், அணிகலன்கள், கண்ணாடி, இசைக்கருவி, கார், பைக், தொப்பி, ஓவியங்கள் உள்ளிட்டவை பல கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு செல்வதை பார்த்திருப்போம். அதில் இருந்து ஒருகுறிப்பிட்ட அல்லது முழு தொகையும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவார்கள். ஆனால் இந்த முறை உலக அளவில் சாதனை படைத்த விஸ்கி பாட்டில் ஒன்றினை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் வந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.

ஸ்காட்ச் ரக விஸ்கியை கொண்ட 5 அடி நீளம், 11 அடி அங்குலம் நீளமுள்ள பாட்டிலை 2021ம் ஆண்டு மெக்கலன் நிறுவனம் உருவாக்கியது. உலக அளவில் புகழ் பெற்ற மெக்கலன் நிறுவனம் தயாரித்த 32 ஆண்டுகள் பழமையான பேரலில் இருந்து உலகிலேயே மிகப்பெரிய விஸ்கி பாட்டில் நிரப்பப்பட்டுள்ளது. இந்த பாட்டில் உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி, 2021ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. 311 லிட்டரும் கொள்ளவும் கொண்ட பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள விஸ்கிக்கு ‘தி இண்ட்ரிபிட்’ என பெயர் சூட்டப்பட்டது.

இந்த பாட்டிலை வாங்க அப்போது பல மில்லினியர்களும் ஆர்வம் காட்டிய நிலையில், இம்மாதம் 25ம் தேதி அன்று ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி குறிப்பிட்ட தேதியில் லண்டன் மாநகரின் எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த விஸ்கி பாட்டில் ஏலம் விட்டது. இந்த பாட்டில் பிரிட்டிஷ் மதிப்பிற்கு சுமார் 1.1 மில்லியன் பவுண்டிற்கு விற்பனையாகியுள்ளது.


லியோன் & டர்ன்புல்லின் நிர்வாக இயக்குனர் கவின் ஸ்ட்ராங்கின் கூறுகையில் "உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டிலான இன்ட்ரெபிட் கலெக்‌ஷன், மிகப்பெரிய உலகளாவிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஏலத்தின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஒரு சர்வதேச விஸ்கி சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். 32 ஆண்டுகள் பழமையான பேரலில் இருந்து ராட்சத பாட்டிலை நிரப்பியதோடு, மீதமுள்ள விஸ்கி 12 சிறிய அளவிலான பாட்டில்களில் நிரப்பப்பட்டுள்ளன. இன்ட்ரெபிட் பாட்டிலின் லேபிளில் 'உலகின் மிகவும் கொண்டாடப்படும் 11 ஆய்வாளர்களின்' போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது ஒல்லி ஹிக்ஸ், சர் ரனுல்ஃப் ஃபியன்னெஸ், வில் கோப்ஸ்டேக், டுவைன் ஃபீல்ட்ஸ், கரேன் டார்கே உள்ளிட்டோரது புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த பெரும் தொகையில் இருந்து 25 சதவீதம் மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்