நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எடை குறைப்பு Vs கொழுப்பு குறைப்பு... இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன..?

 உடற்பயிற்சி, டயட் போன்ற செயல்முறைகளை தொடங்கும் முன்பு உடல் எடை எவ்வளவு என்பதை அறிந்து கொள்வது நல்லது. அதேபோல் உடல் எடை குறைவதை தங்கள் வொர்க்அவுட்டிற்கு கிடைத்த பலன் என தவறாக கருதுகின்றனர்.


உலகம் முழுவதும் உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது. உடல் உழைப்பு இன்மை, பாஸ்ட் ஃபுட், மன அழுத்தம், வேலைப்பளு, உடற்பயிற்சி செய்யாதது, மாறி வரும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் கிடுகிடுவென உயரும் உடல் எடையை குறைக்க பல ஆண்டுகள் போராடினால் தான் முடியும். உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் செய்யும் போதுவான விஷயமும் தினமும் எடையை கண்காணிப்பது.

உடற்பயிற்சி, டயட் போன்ற செயல்முறைகளை தொடங்கும் முன்பு உடல் எடை எவ்வளவு என்பதை அறிந்து கொள்வது நல்லது. அதேபோல் உடல் எடை குறைவதை தங்கள் வொர்க்அவுட்டிற்கு கிடைத்த பலன் என தவறாக கருதுகின்றனர். ஏனெனில் இது வழக்கமானது அல்ல. எடை இழப்புக்கான பயிற்சியின் நோக்கம் உண்மையில் எடையை குறைப்பது அல்ல, ஆனால் அது கூடுதல் கலோரிகளை எரிப்பது மற்றும் கொழுப்பை குறைப்பது ஆகும்.

உடல் எடையை குறைப்பது, கொழுப்பை குறைப்பதில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதையும், அதற்கான உடற்பயிற்சிகள் மற்றும் செயல்திட்டங்களை வகுப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்வோம்.

எடை vs கொழுப்பு:

உடல் எடை கொழுப்பால் மட்டுமின்றி தசைகள், எலும்பின் அடர்த்தி, உடலில் உள்ள நீர் போன்றவற்றாலும் தீர்மானிக்கப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த சரிவே எடை இழப்பை குறைக்கிறது. சாப்பிட்ட பிறகு நமது எடை மாறுகிறது. நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. நீங்கள் வெறும் வயிற்றில் 50 கிலோ எடையுள்ளவராக இருந்தால், நீங்கள் உட்கொண்ட உணவு மற்றும் தண்ணீரின் காரணமாக நாள் முடிவில் உங்கள் எடை அதிகரிக்கக்கூடும்.


இதற்கிடையில், கொழுப்பு என்பது நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பொறுத்தது. உடலில் உள்ள கொழுப்பு சத்து நமது உடல் எடையை அதிகரிக்கலாம். உடலில் கொழுப்பின் சதவீதம் அதிகரிக்கும் போது, நீங்கள் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

எனவே உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் கொழுப்பை குறைப்பது நல்லது. இதனால் உடலை ஸ்லிம்மாக மாற்றுவதோடு, பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம்.

எடை குறைப்பு vs கொழுப்பு இழப்பு எதில் கவனம் தேவை?

ஒருவர் உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வொர்க்அவுட்டானது, கொழுப்பை வேகமாக எரித்து, வெளியிலும் உள்ளேயும் இருந்து நம்மைப் பொருத்தமாக உணர வைக்கும் பயிற்சிகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். வெறும் வெயிட் பார்க்கும் மிஷினில் தோன்றும் எண்ணை மட்டும் நம்பி முயற்சிக்காமல், கொழுப்பை எரிக்கவும், இடுப்பு, கைகள் மற்றும் உடலின் பிற பகுதிகளிலிருந்து கூடுதல் அளவை குறைக்கவும் உதவும் முறைகளை பின்பற்றுங்கள்.


நீங்கள் கொழுப்பை இழக்கத் தொடங்கிவிட்டாலே, உடல் எடையை குறைக்க தேவையான முக்கியமான விஷயத்தை இழக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்று பொருள். சில நேரங்களில், அதிகப்படியான கொழுப்பைக் கொண்ட ஒரு நபரின் உடல் எடை குறைவாக இருக்கும், ஏனெனில் அவரது உடல் எடை குறைவாக இருக்கும். ஆனால் உடல் பார்க்க குண்டாக தெரியும், இப்படிப்பட்ட நபர்கள் நிச்சயம் தங்களது உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்க வேண்டும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!