ஈஸியா உடல் எடையை குறைப்பதற்கு 7 விதமான ரைதா ரெசிஃபிக்கள் இதோ!
- Get link
- X
- Other Apps
உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நல்லதொரு ஆரோக்கியமான செயலாகும்.
அந்த வகையில் நம்முடைய பசியை கட்டுப்படுத்துவதில் தயிர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலை குளிர்ச்சி அடையச் செய்வதுடன், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி புரதச்சத்தையும் தருகிறது. ஆக, தயிரை மையமாக வைத்து நம் உடல் எடையை குறைப்பதற்கான ரைதா வகைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வெள்ளரி ரைதா : வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிகுந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனுடன் புளிக்காத தயிர் சேர்த்து நாம் எடுத்துக் கொள்ளும்போது நம் உடல் எடையை குறைக்க அது உதவுகிறது. இந்த ரைதாவில் ஃபேட் எதுவும் கிடையாது. அதே சமயம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும்.கொஞ்சம் மிளகு தூள் மற்றும் இந்து உப்பு ஆகியவற்றை சேர்த்து கொண்டால், இதன் சுவை கூடும் என்பதுடன் எடை குறைப்புக்கும் உதவியாக இருக்கும்.
ஜீரக ரைதா: உடல் எடையை குறைப்பதற்கான உணவுப் பொருட்களில் ஜீரகத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. இதில் உள்ள தைமோல் என்னும் பொருள் நம் உடலில் பசியை கட்டுப்படுத்தக் கூடிய என்ஜைம்களை தூண்டும். அதன் விளைவாக உடல் எடை குறையும். பழங்காலத்தில் தொப்பையை குறைப்பதற்கான மிக முக்கிய மருந்தாக ஜீரகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
புடலங்காய் ரைதா : புடலங்காய் மிக அதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுப் பொருள் ஆகும். நம் வயிறு நிரம்பிய உணர்வை இது தருகிறது. இதனால், உடல் எடையை குறைக்க ஏதுவாக உள்ளது.
ஆளி விதை ரைதா : இதுவும் நார்ச்சத்து கொண்டது தான் என்றாலும் கூட, அளவுக்கு அதிகமாக இதை ரைதாவில் நீங்கள் சேர்த்துக் கொண்டீர்கள் என்றால், அதன் சுவை குறைந்துவிடும். தயிர், ஆளி விதை, சீரக பவுடர், உப்பு போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும்.
பீட்ரூட் ரைதா : ரைதா என்றாலே வெள்ளை நிறத்தில் இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு இது சற்று வித்தியாசமானதாக இருக்கும். பீட்ரூட், கேரட் துருவல்களை சேர்த்து இந்த ரைதாவை தயார் செய்யலாம்.
காய்கறி ரைதா : உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய இந்த காய்கறி ரைதாவுக்கு உண்டு. இதில் காப்சியம் மிளகாய், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
புதினா ரைதா : அரைத்து வைத்த கொத்தமல்லி அல்லது புதினா கீரை கொண்டு இதை தயார் செய்யலாம். உடலுக்கு உடனடி கூலிங் தரக் கூடியது. எந்தவொரு சாப்பாட்டுக்கும் இதை சைட் டிஷ்ஷாக வைத்துக் கொள்ளலாம்.
ALSO READ : ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் தீர்வா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment