நாக்கு எரிதல் பொதுவான ஒரு நிலை. மிகவும் சூடாக இருக்கும் ஒன்றை சாப்பிட்ட பிறகு அல்லது குடித்த பிறகு உண்டாகும்.
இந்த எரிச்சல் ஏற்படும் உணர்வை ஸ்டோமாடோடினியா அல்லது குளோசோடினியா என்று அழைக்கின்றனர்.
சூடான நீர் அல்லது திரவங்களின் வெப்பநிலையை உணராமல் குடிக்கும் போது அது காயத்தை உண்டு செய்யலாம். சூடான பானங்களை அடிக்கடி சாப்பிடுவதும் குடிப்பதும் நாக்கு எரியும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
இவற்றை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- நாக்கில் ஏற்படும் எரிச்சலை போக்க கற்றாழை ஜெல்லை நாக்கில் தடவி வரலாம். கற்றாழை ஜெல்லை அதன் மஞ்சள் நிற திரவம் போக சுத்தம் செய்து நாக்கில் தடவி வந்தால் எரிச்சல் படிப்படியாக குணமாகும்.
- நாக்கில் எரிச்சல் ஏற்படும் போது ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவது எரிச்சலை மட்டுப்படுத்த உதவுகிறது. ஐஸ் க்யூப்களை மெல்லிய சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து ஒத்தடம் கொடுப்பதன் மூலம் நாக்கில் எரிச்சல் போகும்.
- சுயிங்கம் எரியும் உணர்வை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் எரியும் உணர்வை தற்செயலாக குறைக்க முடியும். ஆனால் சர்க்கரை இல்லாததை பயன்படுத்த வேண்டும்.
- ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1-2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு 2-3 முறை பயன்படுத்தி வாயை கொப்பளித்து வாருங்கள். நாக்கில் உள்ள எரிச்சலை இதன் மூலம் குணப்படுத்த முடியும்.
- திரிபலா போன்ற பொருட்களைக் கொண்டு கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்து வந்தால் எரியும் உணர்வை போக்க முடியும். இது நாக்கிற்கு நல்ல குளிர்ச்சியை தருகிறது. தினமும் இரண்டு வேளை இதை குடித்து வந்தால் நாக்கு எரிச்சல் படிப்படியாக குறையும்
- குளிர்ந்த ஆப்பிள் ஜூஸைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தால் நாக்கில் உள்ள எரிச்சலை குறைக்க முடியும். அதிகமாக உணவை சேர்க்க முடியாமல் போகும் போது ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம்.
- இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நாக்கில் கிளிசரின் தடவி வரலாம். இது படிப்படியாக எரிச்சலிலிருந்து தடுக்க உதவும்.
- தேனை நேரடியாக நாக்கில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு 2-3 முறை இதை செய்து வருவது நல்ல பலனை கொடுக்கும்.
- படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சிறிது லாவெண்டர் எண்ணெயை நாக்கில் தடவிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் வாயை கொப்பளித்து விட்டு பல் துலக்கிக் கொள்ளுங்கள். இதுவும் உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
Comments
Post a Comment