Milk Remedies for Blood Sugar: சர்க்கரை நோயாளிகள் இந்த 3 பொருட்களை பாலில் கலந்து குடித்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்
- இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பால் வகைகள்
- மஞ்சள், பதாம் மற்றும் கிராம்புடன் பால் காம்பினேஷன்
- இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பாலின் மருத்துவ பண்பு
Milk Affect Your Blood Sugar: சர்க்கரை நோயாளிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானது. நீரிழிவு நோய் வருவதற்கு முன்பு இருந்த வாழ்க்கையை அவர்களால் தொடர முடியாது. உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் பல்வேறு மாறுதல்களை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனெனில் நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் விரும்பியதை சாப்பிடவோ குடிக்கவோ முடியாது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைப்பது என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் பால்
சர்க்கரை நோய் என்பது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஒரு நோயாகும். இந்த நோய் தற்போது வெகு வேகமாக அனைவருக்கும் வருகிறது.
இதற்கு காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று நம்பப்படுகிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டால், எதை சாப்பிடுவதற்கு முன்பும் ஒரு முறை யோசிக்க வேண்டியிருக்கிறது.
இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது, ஆனால் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் மருந்துகள் காரணமாக, அதை நிர்வகிக்கலாம். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருந்தால், விருப்பப்படி சாப்பிடலாம். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க சில வீட்டு வைத்தியங்களையும் கடைபிடிக்கலாம்.
பாலில் கலந்து குடித்தால் சில பொருட்கள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
பால் + மஞ்சள்
மஞ்சள் கலந்த பாலை தினசரி குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
பாலுடன் பாதாம்
பாதாம் பால் குடிப்பதற்கு சுவையானது மட்டுமல்ல, நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். பாதாமில் பல சத்தான கூறுகள் உள்ளன. இந்த கூறுகள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுவதோடு, பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.
பாலுடன் இலவங்கப்பட்டை
நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை கலண்டஹ பால் பயனுள்ளதாக இருக்கும். இலவங்கப்பட்டையில் கால்சியம், ஆல்பா கரோட்டின், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், லைகோபீன், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளன, இவை உடலுக்கு நன்மை பயக்கும். இந்த பாலை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயும் கட்டுப்படும்.
உடலுக்கு நன்மை பயக்கும், மஞ்சள், பதாம் மற்றும் கிராம்புடன் பால் காம்பினேஷன் உடலுக்கு நன்மை அளிக்கும். இருந்தாலும் பாலை இந்த விதத்தில் குடிப்பதற்கு முன்னதாக மருத்துவரிடம் ஆலோசனை செய்து, உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற பாலை தேர்ந்தெடுத்து குடியுங்கள்.
Comments
Post a Comment