நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா..? இந்த ஆயுர்வேத டிப்ஸுகளை பின்பற்றி பாருங்கள்.....

 பல விஷயங்கள் நமது செரிமான மண்டலத்தில் உள்ள பாக்டீரியாக்களை பாதிக்கின்றன, அவற்றில் ஒன்று நாம் உண்ணும் உணவுகள். புரோபயாடிக்ஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்க உதவும்.


அடிக்கடி வாய் துர்நாற்றத்தால் அவதிப்படும் பலர் வெளியில் பிறரிடம் பேசுவதற்கே சங்கடமான சூழலை அனுபவிப்பார்கள். பொதுவாக வாய் துர்நாற்றம் அடிப்படை நோய் இல்லாத வேறு சில காரணங்களால் ஏற்படும். உதாரணமாக மோசமான பல் சுகாதாரம், நீரிழப்பு, வெங்காயம் அல்லது பூண்டு போன்ற சில உணவுகளை சாப்பிடுவது போன்றவை...

சரியான பல் மற்றும் வாய் சுகாதாரத்தை பேணாத போது உணவுத் துகள்கள் வாயில் தங்கி, வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். துர்நாற்றம் பெரும்பாலும் கந்தகத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. இவை பொதுவாக நாக்கின் மேற்பரப்பிலும் தொண்டையிலும் வாழ்கின்றன. இதுவே ஆயுர்வேதத்தின் படி, மோசமான வாய்வழி சுகாதாரம் மற்றும் செரிமான அமைப்பைக் கட்டுப்படுத்தும் பித்த தோஷத்தின் ஏற்றத்தாழ்வு வாய் துர்நாற்றத்திற்கு அடிப்படை காரணமாக குறிப்பிடப்படுகிறது. இது தவிர வாயிலிருந்து சுவாசிப்பது, துர்நாற்றம் வீசும் உணவுகள் (பூண்டு, வெங்காயம்), டீ, காபி, சில மருந்துகள், சைனஸ் தொற்று அல்லது சளி, மது மற்றும் புகைபழக்கம் குறிப்பிடப்படுகிறது.

வாய் துர்நாற்றத்தை போக்க உதவும் வழிகள்:

குடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்:

பல விஷயங்கள் நமது செரிமான மண்டலத்தில் உள்ள பாக்டீரியாக்களை பாதிக்கின்றன, அவற்றில் ஒன்று நாம் உண்ணும் உணவுகள். புரோபயாடிக்ஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்க உதவும். ஆரோக்கியமான குடல் பாக்டீரியா என்பதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முக்கியமான அம்சம் ஆகும். பழங்கள், காய்கறிகள் மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதும் நன்கு வறுத்த, நிறைவுற்ற கொழுப்பு, சிவப்பு இறைச்சி மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதும் குடல் போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை பெற உதவும்.


உங்கள் உடலை அழற்சி ஏதுமின்றி பார்த்து கொள்ளுங்கள்:

உடலுக்கு போதுமான சத்து மற்றும் உடற்பயிற்சி கிடைக்காவிட்டால் அது அழற்சிகளுக்கு காரணமாகிறது. எனவே அழற்சி எதிர்ப்பு வாழ்க்கை முறை மற்றும் டயட்டை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் அழற்சிகளை குறைக்கலாம். ஃபிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது மற்றும் ரிஃபைன்ட் சர்க்கரையை தவிர்ப்பது ஒரு தீர்வாக இருக்கும். திராட்சை, செலரி, ப்ளூ பெர்ரிஸ், இஞ்சி, மஞ்சள் போன்றவை அழற்சி எதிர்ப்புகளில் முக்கியமானவை.

வாத தோஷத்தை கட்டுக்குள் வைக்கவும்:

கட்டுப்படுத்தப்பட்ட வாத தோஷம் நம் உடலமைப்பை ஆரோக்கியமாகவும் செயல்பட வைக்கிறது. ஆனால் சமநிலையற்ற வாத தோஷம் பலவீனம், அமைதியின்மை, தேவையற்ற அழற்சி உள்ளிட்ட பல கோளாறுகளை பலவற்றை ஏற்படுத்தும். மோர், இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவை சிறந்த வாத சமநிலைப்படுத்தும் உணவுகள். அறை வெப்பநிலையை விட குளிர்ச்சியாக இல்லாத சூடான சூப் போன்ற பிற சூடான திரவங்கள் வாதத்தை சமநிலைப்படுத்த உதவுகின்றன. குளிர் பானங்கள் மற்றும் குளிர் உணவுப் பொருட்களை தவிர்த்து சூடான பொருட்களை சாப்பிடுவதன் மூலம் வாத தோஷ ஏற்றத்தாழ்வைத் தவிர்க்கலாம்.


செரிக்கப்படாத வளர்சிதை மாற்ற கழிவுகளை டிடாக்ஸ் செய்யவும்:

அதிகமாக உண்பது, பேக்கேஜிங் உணவுகளை உண்பது, குளிர் பானங்கள் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது செரிக்கப்படாத வளர்சிதை மாற்ற கழிவுகளை உண்டாக்குகின்றன. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செரிக்கப்படாத வளர்சிதை மாற்ற கழிவுகளை உடலில் இருந்து அகற்ற காய்கறி விரத முறையை கடைபிடிக்கலாம். அலல்து வாரம் ஒருமுறை விரதம் இருக்கலாம். மேலும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்.

எனர்ஜி டிரிங்:

அரை கிளாஸ் கேரட் ஜூஸ், பாதி மாதுளை தோலுடன், அரை கிளாஸ் பீட்ரூட் ஜூஸ்/ஒரு பாட்டில் சுரைக்காய் ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் கலக்கவும். 10 பாதாம், 5 அக்ரூட் பருப்புகள், 1 ஏலக்காய், அரை டீஸ்பூன் பெருஞ்சீரக தூள், 2 இன்ச் ஃபிரெஷ்ஷான மஞ்சள் அல்லது 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், பநெல்லி 2 அல்லது நெல்லிகாய் பவுடர் ஆகியவற்றை இந்த கலவையில் ஊறவைத்து ஸ்மூத்தியாக்கி காலை நேரத்தில் பருகலாம்.


மூலிகைகளை வாயில் போட்டு மெல்லலாம்:

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள பெருஞ்சீரக விதைகள், சில புதினா இலைகள் அல்லது கொத்தமல்லியை போட்டு வாயில் மெல்லுவது உங்கள் வாய் பகுதியை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். வாய் துர்நாற்றத்தையும் குறைக்கும்.

டூத் பிரஷ்ஷை மாற்றுங்கள்:

தினமும் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷில் அதிக பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே அதிக நாட்கள் பயன்படுத்தப்படும் டூத் பிரஷ் வாய் துர்நாற்றத்தை உருவாக்க தொடங்குகிறது. எனவே தினமும் டூத் பிரஷ்ஷை பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் சரியாகக் கழுவி சுத்தம் செய்யவும். ஒவ்வொரு மாதமும் அதை மாற்ற முயற்சிக்கவும்.


ALSO READ : காம்பினேஷன் சருமத்துக்கான பராமரிப்பு முறைகள் ........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்