நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமினோ அமிலங்கள் உள்ள உணவுகள் எவை? ஏன் அமினோ அமிலங்கள் முக்கியம்?

 உடலில் உள்ள திசுக்களைச் சரி செய்ய, ஹார்மோன்களை உருவாக்க, மூளை கெமிக்கல்களை உருவாக்க, எனர்ஜி கொடுக்க, சருமம், முடி, நகங்களைப் பராமரிக்க, தசைகளை உருவாக்க, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, செரிமான மண்டலத்தைச் சீராகச் செயல்பட வைக்கப் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்கிறது இந்த அமினோ அமிலங்கள்.


உடலுக்குப் பல வகையான சத்துகள் தேவைப்படும். ஆனால், அடிக்கடி நாம் கேள்விப்படுவது பெண்கள் கருவுற அமினோ அமிலங்கள் முக்கியம் என மருத்துவர்கள் சொல்வதுண்டு. பெண்கள் மட்டுமல்ல அனைவருக்குமே அமினோ அமிலங்கள் தேவைதான். இவை உணவிலேயே நிறைந்து கிடக்கின்றன. அவற்றைச் சாப்பிட்டாலே போதும் நமக்குத் தேவையான சத்துகள் கிடைத்துவிடும். கருவுறப் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதால் மருத்துவர்கள் பெண்களைத் தாயாவதற்கு முன்னே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். குழந்தையின் உடலை உருவாக்க மட்டுமல்ல, எல்லாருக்குமே அமினோ அமிலங்கள் அவசியம்.


அமினோ அமிலங்கள் ஏன் முக்கியம்?

புரதச் சத்து, அமினோ அமிலங்களால் கட்டமைக்கப்படுகிறது. விதவிதமான புரதங்கள் உள்ளன. விதவிதமான வடிவங்களிலும் புரதங்கள் உள்ளன. அமினோ அமிலங்கள் எல்லாம் சேர்ந்து, புரதத்தை உருவாக்கும்.

உடலில் உள்ள திசுக்களைச் சரி செய்ய, ஹார்மோன்களை உருவாக்க, மூளை கெமிக்கல்களை உருவாக்க, எனர்ஜி கொடுக்க, சருமம், முடி, நகங்களைப் பராமரிக்க, தசைகளை உருவாக்க, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, செரிமான மண்டலத்தைச் சீராகச் செயல்பட வைக்கப் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்கிறது இந்த அமினோ அமிலங்கள்.

என்னென்ன அமினோ அமிலங்கள் உள்ளன?

ஹிஸ்டிடைன்

ஐசோலுசின்

லுசின்

லைசின்

மெத்தியொனின்

பெனிலாலனைன்

திரியோனைன்

டிர்ப்டொஃபன்

வாலின்

எப்போது சாப்பிடலாம்?
உணவாகச் சாப்பிடுவதுதான் சிறந்தது. மாத்திரைகளாக எடுப்பதை விட… அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகளை வாரம் ஓரிரு முறையாவது சாப்பிட்டு வருவது நல்லது. முடியாதவர்கள், 10 நாட்களுக்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள்.


அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள உணவுகள்

திணை

திணையில் அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சிறுதானிய வகைகளில் ஒன்று திணை. இதில் திணை பொங்கல் செய்து சாப்பிடுவது சுவையாக இருக்கும். தோசை மாவு தயாரிப்பது போல, திணை மாவு தயாரித்து இட்லி, தோசை, ஊத்தப்பங்களும் செய்யலாம். சுவையான வெல்லமோ கருப்பட்டியோ சேர்த்துத் திணை மாவு சத்து உருண்டைகளும் செய்து சாப்பிடலாம். திணை சோறாகவும் சாப்பிடும் பழக்கம் நம் நாட்டில் உள்ளது. உங்களுக்கு விருப்பமான முறையில் திணையைச் சேர்த்துகொண்டு பயன்பெறலாம்.

முட்டை

முட்டைகளிலேயே நாட்டு முட்டையில்தான் சத்துகள் ஏராளம். நாட்டு முட்டை கிடைத்தால் அதை அவித்தோ ஏதோ ஒரு வகையில் சாப்பிடுங்கள். காடை முட்டை கிடைத்தாலும் சாப்பிடுங்கள். அதிலும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.

டர்கி கோழி

வான் கோழியைத்தான் டர்கி கோழி என்கிறார்கள். இதையும் பிரியாணியாகவோ சிக்கன் குழம்பு, வறுவல் செய்வது போலத் தயாரித்துச் சாப்பிடலாம். அமினோ அமிலங்கள் கிடைக்கும்.

காளான்

சைவ பிரியர்களின் அசைவ சுவையை ஈடுகட்டுவது காளான்கள்தான். காளானை 15 நாட்களுக்கு ஒருமுறையாவது செய்து சாப்பிடுங்கள். சூப், கிரேவி, பொரியல், அவித்தல் என விதவிதமாகச் செய்து சாப்பிடலாம்.

மீன்

பொதுவாக மீன்கள் சத்துள்ள அசைவ உணவுகளில் முதல் இடம் பிடிப்பவை. அத்தகைய வகையில் மீன்களை வாரம் ஓரிரு முறை உண்ணுவது அமினோ அமிலங்கள் மட்டுமல்லாது மற்ற சத்துகளும் கிடைக்கும். மீன்களை வறுத்து உண்பதைவிடக் குழம்பு மீன்களாக உண்ணுவது சத்துகள் கிடைக்கச் சிறந்த வழி.

வாழைப்பழம்

அனைத்து வகை வாழைப்பழங்களும் உண்ணலாம். சாலட்டாக, ஸ்மூத்தியாக எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

நட்ஸ்

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. தலா 2 என தினமும் சாப்பிடலாம். அல்லது வாரம் 2 முறையாவது சாப்பிடுங்கள். 2 ஸ்பூன் நிலக்கடலையும் சாப்பிட்டு வரலாம். இதிலும் அமினோ அமிலங்கள் உள்ளன.








Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்