உங்கள் சரும அழகை மெருகூட்ட.. நிபுணர் அங்கீகரித்த ஹோம் ரெமெடிஸ் ..
- Get link
- X
- Other Apps
தோல் மருத்துவர் கிரண் சேத்தி, டோனர், க்ளோ மாஸ்க் மற்றும் லிப் ப்ரைட்னர் உள்ளிட்ட தனக்குப் பிடித்த சில எளிய அழகுக் குறிப்புளைப் பகிர்ந்துள்ளார்.
சந்தையில் தோல் பராமரிப்பு பொருட்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் அனைத்து இயற்கை பொருட்களையும் பயன்படுத்தி உங்கள் சொந்த பேக்குகள் மற்றும் டோனர்களை, வீட்டிலேயே தயாரிப்பது அதன் தனித்துவமான அழகைக் கொண்டுள்ளது. அத்துடன் வீட்டு வைத்தியம் பாதுகாப்பானது, மென்மையானது, இரசாயனங்கள் இல்லாதது மற்றும் எப்போது வேண்டுமானாலும் தயாரிக்கலாம்!
இங்கு, தோல் மருத்துவர் கிரண் சேத்தி, டோனர், க்ளோ மாஸ்க் மற்றும் லிப் ப்ரைட்னர் உள்ளிட்ட தனக்குப் பிடித்த சில எளிய அழகுக் குறிப்புளைப் பகிர்ந்துள்ளார். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி இதை விரைவாகச் செய்யலாம்.
நேச்சுரல் டோனர்
தேவையான பொருட்கள்
கிரீன் டீ
தண்ணீர்
செய்முறை: கிரீன் டீயை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவிடவும். இதை உங்கள் முகத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஸ்பிரே செய்யவும். இப்படி செய்வதால், துளைகள் இறுக்கமாகும், மேலும் சருமம் புத்துணர்ச்சி பெறும். இது எண்ணெய் சுரப்பைக் குறைக்கிறது, ரோசாசியாவைத் தடுக்கிறது.
வீட்டில் தயாரிக்கப்படும் இந்த டோனரில், எந்தப் பாதுகாப்பு சேர்க்கைகள் இல்லாததால், அதை தினமும் புதியதாக செய்யவும்.
க்ளோ மாஸ்க்
தேவையான பொருட்கள்
½ டீஸ்பூன் தயிர்
½ டீஸ்பூன் தேன்
1 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள்
சாதரண நீர்
செய்முறை
அனைத்து பொருட்களையும் கலந்து முகத்தில் ஐந்து நிமிடங்கள் தடவவும். அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நெல்லிக்காய் பொடியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது, இது பளபளப்பை அதிகரிக்கிறது மற்றும் பிக்மேன்டேஷனை போக்குகிறது.
உயர்தர வைட்டமின் சி கொண்ட தயாரிப்புகளை தான் விரும்புவதாக கிரண் கூறினார், ஏனெனில் வைட்டமின் சி காற்றில் வெளிப்படும் போது மிக விரைவாக செயலிழக்கச் செய்கிறது.
லிப் பிரைட்னர்
தேவையான பொருட்கள்
¼ கப் அரைத்த மாதுளை விதைகள்
½ கப் பீட்ரூட்
1 டீஸ்பூன் நெய்
செய்முறை
மாதுளை விதைகளை நசுக்கி சாறு எடுக்கவும். பீட்ரூட் சாற்றை வடிகட்டி, மாதுளை சாறு மற்றும் நெய்யுடன் கலக்கவும். உங்கள் உதடுகளில் பயன்படுத்துங்கள்; இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
பீட்ரூட்டில் – பெட்டானின் மற்றும் வல்காக்சாந்தின் – நிறமிகள் உள்ளன, இது பிக்மேன்டேஷன் உதடுகளை பிரகாசமாக்குகிறது, அதே நேரத்தில் மாதுளை நிறமாற்றத்தைத் தடுக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், மேலும் நெய் உதடுகளை ஈரப்பதமாக்க உதவுகிறது.
ALSO READ : புருவங்களை அடர்த்தியாக வளர செய்ய வேண்டுமா? சில அழகு குறிப்புக்கள் உங்களுக்காக!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment