நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கனடாவில் தனது பர்ஸில் ரூ 16 கோடி இருப்பதை உணராமல் இருந்த நபர்! பின்னர் கைக்கு வந்த அதிர்ஷ்டம்

 கனடாவில் ரூ 16 கோடி பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட் தனது பர்ஸில் இருப்பதை கவனிக்காமல் இருந்த நபர் ஒருவழியாக அதை பார்த்து பரிசு பணத்தை பெற்று கொண்டுள்ளார்.

வான்கூவரில் தான் இந்த சீட்டை Chee Yee Fong என்ற பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்த நபர் வாங்கினார். பின்னர் அதை தனது பர்ஸில் வைத்து கொண்டார்.

அவர் பர்சில் உள்ள சீட்டுக்கு கனேடிய பணமான $1 மில்லியன் ( கிட்டத்தட்ட ரூ 16 கோடி) விழுந்திருந்ததை அவர் அறியாமல் இருந்தார்.


இந்த நிலையில் லொட்டரி சீட்டு தன் பர்ஸில் இருப்பது என்பதை உணர்ந்து அதற்கு பரிசு விழுந்ததா என பார்க்க Chee Yee முடிவு செய்தார்.

இதையடுத்து அங்குள்ள கேஸ் நிலையத்தில் அதற்கு பரிசு விழுந்ததா என பார்க்க $1 மில்லியன் பரிசு விழுந்தது தெரியவந்தது.

இது குறித்து Chee Yee கூறுகையில், எனக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்தது என என் மகளுக்கு சொன்னேன்.

இதை கேட்டு மகிழ்ச்சியில் அவள் அழுதே விட்டாள், என் ஆரோக்கியத்திற்காக இந்த பணத்தில் இருந்து முதல் செலவை மேற்கொள்வேன் என கூறியுள்ளார்.



ALSO READ : கொரோனா வைரஸ் பற்றி தகவல் கொடுத்தால் ரூ11 லட்சம் பரிசு! பிரபல நாட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்