நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

"ஒயின் போல சுவை" 4 வருடங்களாக தன் சிறுநீரை பருகி வரும் பெண்

 ஒரு நாளைக்கு சுமார் 5 கிளாஸ் சிறுநீரைக் குடிப்பதாகவும், இப்போது சிறுநீர் குடிப்பது சகஜமாகிவிட்டது என்கிறார் அவர். இப்போது அவரால் அது இல்லாமல் வாழ முடியாது என்பதுதான் பிரச்சனை!


இந்த உலகில் சிலரின் பொழுதுபோக்குகள் மிகவும் விசித்திரமானவையாக இருக்கிறது. சிலரின் பொழுது போக்குகளை நீங்கள் அறிந்தால் அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள். மேலும் சிலர் விசித்திரமான விஷயங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள முயற்சிகளை எடுத்து வருபவர்களும் உள்ளனர். பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்கள் ​​​​அந்தப் பழக்கத்திக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள். அதை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை பற்றி தான் இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். 

அதாவது கடந்த நான்கு வருடங்களாக தனது சிறுநீரையே விரும்பி குடித்து வருகிறார். அது அவருக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது. வாருங்கள் முழு விவரம் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

53 வயதான இந்த பெண்ணின் பெயர் கேரி என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்தவர். சமீபத்தில், ஒரு நேர்காணலின் போது, ​​அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது சிறுநீரை குடிப்பதாக கூறினார். 

சிறுநீர் குடிப்பது சகஜம்:

ஒரு நாளைக்கு சுமார் 5 கிளாஸ் சிறுநீரைக் குடிப்பதாக அவர் கூறினார். இப்போது சிறுநீர் குடிப்பது தனக்கு சகஜமாகிவிட்டது என்கிறார். இப்போது அவரால் அது இல்லாமல் வாழ முடியாது என்பதுதான் பிரச்சனை. இது எப்படி தொடங்கியது என்று கேட்டபோது, ​​மெலனோமா புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது சிறுநீர் குடிக்க ஆரம்பித்ததாக அவர் கூறினார்.

சிறுநீர் ஒயின் போல சுவையாக இருக்கிறது:

சூடான சிறுநீரைக் குடித்தால், மிகுந்த நிவாரணம் பெறுவதாக கேரி கூறுகிறார். அதே நேரத்தில், அவர் சிறுநீரை குடிக்கும் சோதனை குறித்து சில சிரமங்களையும் சந்திப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது கெர்ரி எதையாவது சாப்பிட்டால் அதில் சிறுநீர் வாசனை வருகிறது என்று தெரிவித்துள்ளார். அதேபோல ஒவ்வொரு முறையும் சில சிரமங்கள் ஏற்படுவதாகவும் கூறினார். சில நேரங்களில் சிறுநீர் ஒயின் போல சுவையாக இருக்கிறது. 

தலைமுடியில் சிறுநீர் தடவுகிறேன்:

சிறுநீரை குடிக்க ஆரம்பித்ததில் இருந்து மிகவும் நிம்மதியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ஆச்சர்யம் என்னவென்றால், சிறுநீரைக் குடிப்பது மட்டுமின்றி, தலைமுடியில் தடவுவதுடன், கண்களுக்குக் கீழே பேஸ்மசாஜ் செய்யவும் பயன்படுத்துகிறார்.


ALSO READ : மாட்டுச்சாணி மிகவும் சிறந்த உணவு: விரும்பி உண்ணும் MBBS டாக்டர்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்