நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு மாஸ்கின் விலை 5.70 லட்சம் ரூபாய்! கொரோனாவுக்கு பாதுகாப்பு கொடுக்குமா?

 கோவிட்-19 பரவல் குறைந்துவிட்டாலும், முகக்கவசங்கள் அணிவது வழக்கமாகிவிட்டதால், பாதுகாப்பு கவசம் என்ற நிலையில் இருந்து ஆபரணம் என்ற நிலைக்கு மாஸ்க் சென்றுக் கொண்டிருக்கிறது...


நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக பயன்படுத்தப்படும் மாஸ்குகளை பாதுகாக்க பாதுகாவலரை போட வேண்டும் நிலைமை வந்துவிடும் என்று தோன்றுகிறது. இது என்ன புதுக்கதை என்று தோன்றுகிறதா? கொல்கத்தாவில் தொழிலதிபர் ஒருவர் 5.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க முகக்கவசத்தை வாங்கியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகிறது.

கொல்கத்தாவில் சந்தன் தாஸ் என்ற நகைக்கடைக்காரர், 108 கிராம் எடை தங்கத்தில் இந்த ஸ்பெஷல் மாஸ்க்கை தயாரித்துள்ளார். இதன் மொத்த செலவு 5.70 லட்சம் ருபாய் என்று அவர் தெரிவிக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் இந்த நகைக்கடைகாரரின் புதிய மாஸ்குக்கு வரவேற்பும் இருக்கிறதாம். கோவிட்-19 பரவல் குறைந்துவிட்டாலும், முகக்கவசங்கள் அணிவது வழக்கமாகிவிட்டதால், பாதுகாப்பு கவசம் என்ற நிலையில் இருந்து ஆபரணம் என்ற நிலைக்கு மாஸ்க் சென்றுக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

கழுத்தில் செயில், விரல்களில் மோதிரம் போல், வாய்க்கு முகக்கவசம் என்பது இனி தங்கத்தில் அணியலாம் என செல்வந்தர்களை நினைக்க வைக்கத் தூண்டும் புதிய உத்தி இதுவாகவும் இருக்கலாம்.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்ஜ் நகரத்தைச் சேர்ந்த சந்தன் தாஸ் என்ற நகைக்கடைக்காரர் பிரத்யேகமான டிசைனில் நகைகளை வடிவமைப்பதில் நிபுணர். இந்த தங்கக் கவசம் 15 நாட்களில் உருவாக்கப்பட்டது என்றும் சந்தன் தாஸ் கூறுகிறார்.

 கடந்த மாதம் கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது, ​​தொழிலதிபர்  தங்க முகக்கவசத்தை அணிந்துக் கொண்டு பூஜைகளுக்குச் சென்றார். ஆனால் சுற்றியுள்ள மக்கள், இந்த புதுவிதமான முகக்கவசத்தை பார்ப்பதற்காக அவரை சுற்றிக் கொண்டதால், அதை கழற்றி வைத்துவிட்டார்.

நகைகள் மீது தனக்குப் மோகம் இருப்பதால், கழுத்தில் பல தங்கச் சங்கிலிகள், இரு கைகளிலும் பல மோதிரங்கள், கையில் பிரேஸ்லெட் என தங்க நகைகளை அணிந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

முகக்கவசத்தின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பத்திரிகையாளர் ரிதுபர்ணா சாட்டர்ஜி  "இதன் நோக்கம் என்ன?" என்ற கேள்விகளை எழுப்புகிறார். 

"நோயினால் உயிர் இழந்த ஆயிரக்கணக்கானோரைப் பற்றி எந்தவித உணர்வும் அல்லது அக்கறையும் இல்லாமல் தொடர்ந்து கொச்சையாக தங்கள் செல்வச் செழிப்பை வெளிப்படுத்துவது சரியா" என்பது போன்ற பல கருத்துகள், இந்த பதிவுக்கு பதிலிட்டுள்ளனர். 

மற்றொரு பயனர், "எதிர்கால சந்ததியினருக்கான நினைவுப் பரிசாக மட்டுமே இருக்கும். நாம் தொற்றுநோயைக் கடந்து சென்றோம் என்பதற்கான ஆதாரம்!!! இந்த தங்கக் கவசத்தால் எந்தப் பயனும் இல்லை. இது கோவிட் வைரஸுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பையும் அளிக்காது" என்று எழுதியுள்ளார்.

ஒருவர் தங்க  முகக்கவசத்தை பயன்படுத்துவது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 2.89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 55 கிராம் தங்க முகக்கவசத்தை வாங்கினார்.


ALSO READ : பணக்கார நாடுகள் பட்டியல் - அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்