சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மஞ்சள்! எப்படி பயன்படுத்தலாம்?
- Get link
- X
- Other Apps
பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள்தான் பாரம்பரிய அழகுப் பொருளாக பெண்கள் பயன்படுத்தி வந்தனர் .
கிருமி நாசினியில் செயல்படுவது தொடங்கி, உடல் அழற்சியை தடுத்தல், காயங்களுக்கு மருந்தாகுதல், முகப்பருக்களை விரட்டுதல் என மஞ்சளின் மகிமைகள் ஏராளம்.
அழகை அதிகரிக்கும் ஒரு இயற்கை மூலப்பொருளாக இந்த மஞ்சள் அறியப்பட்டு வருகிறது. இதனை முகத்திற்கு பயன்படுத்துவது நல்ல பலனை தரும் தற்போது அவை என்னெ்னன என்பதை பார்ப்போம்.
மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் மறையும்.
மஞ்சள் தூளில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.
சருமம் சுருக்கங்களுடன் காணப்பட்டால், மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் சரிசெய்யலாம்.
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
குதிகால் வெடிப்பு இருந்தால், அதனை போக்க, தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிக்க செல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்பு நீங்கும்.
கடலை மாவில், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, குளிக்கும் போது ஈரமான சருமத்தில் தடவி நன்கு 5 நிமிடம் மசாஜ் செய்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளுடன், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
ALSO READ : உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் யோகா
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment