நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

 வெறும் வயிற்றில் நீர் குடித்தால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்வோம். 

மனித வாழ்க்கைக்கு மட்டுமில்லை, அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தண்ணீரால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. தினம் தினம் சரியான அளவில் நீரை பருக வேண்டும். உடலில் நீரின் அளவு குறைந்தால், பல நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். "நீரின்றி அமையாது உலகு" என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் நம்ம திருவள்ளுவர் கூட விளக்கியுள்ளார். எனவே தண்ணீரின் அருமையை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நாம் தண்ணீரை குடிக்க வேண்டும். குடித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நீரை பருகலாமா? என்ற கேள்வி பலரின் மனதில் எழுகிறது. வாருங்கள்... வெறும் வயிற்றில் நீர் குடித்தால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்வோம். 

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.. இப்படி பல நன்மைகள் கிடைக்கும். 

நீரில் வெந்தியம், தேன், துளசி, வில்வம், அருகம் புல், இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 லிட்டர் நீரில் ஊற வைத்து நீர் அருந்துவதால் ஏற்படும் நமைகள்.


நீர்+வெந்தியம் இரண்டையும் கலந்து குடிப்பதால் ஏற்படும் நலன்கள்:


வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பெண்களுக்கு ஏற்பட்டு வயிற்றுவலியை குறைக்கும்.  


நீர்+சீரகம் சேர்ந்து குடிப்பதால் ஏற்படும் நலன்கள்:


சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.


நீர்+தேன் கலந்து குடிப்பதால் ஏற்படும் நலன்கள்:


இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.


நீர்+துளசி கலந்து குடிப்பதால் ஏற்படும் நலன்கள்:


வாய் துர்நாற்றம், நீரழிவு நோய் குணமாக்கும் தொலில் இருக்கும் படை,சொரி இவற்றை குணமடைய செய்யும்.


நீர்+வில்வம் குடிப்பதால் ஏற்படும் நலன்கள்:


மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குணமாகம்,சீதபேதி குணமாகம். 


நீர்+அருகம்புல் சேர்ந்து குடிப்பதால் ஏற்படும் நலன்கள்:

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாரை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

நீரில்  ஏதேனும்  ஒன்றை {வெந்தியம், தேன், துளசி, வில்வம், அருகம் புல்} எடுத்து இரவில் ஒரு லிட்டர் நீரில் போட்டு மூடி விடுங்கள். மறுநாள் அந்த நீரை விடியற்காலையில் அருந்த வேண்டும். இதனால் முற்றிலும் உடலிலுள்ள அனைத்து குடல்கள் மற்றும் சிறு நீப்பையில் இருக்கும் வெப்பம் தணியும். உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் குணமாகும், உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும்.


also read : குளிர்காலத்திலும் சுறுசுறுப்பாக இருக்க எளிய குறிப்புகள்


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்