நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

லட்சக்கணக்கான பணம் அடங்கிய பையை தவறுதலாக குப்பையில் வீசிய வியாபாரி.! பணத்தை மீட்டாரா..

கிரீஸ் நாட்டில் வசிக்கும் வியாபாரி ஒருவர் சமீபத்தில் பணம் நிறைந்த ஒரு பை மற்றும் குப்பைகள் நிறைந்த ஒரு பை என ஒரே நேரத்தில் 2 பைகளை எடுத்து கொண்டு வெளியில் கிளம்பி இருக்கிறார்.
மனிதர்களாகிய நமக்கு தெரிந்து செய்யும் தவறுகளை விட தெரியாமல் செய்யும் தவறுகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதுவும் பண விஷயத்தில் தவறுதலாக ஏதாவது நிகழ்ந்து விட்டால் அது மனதளவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் தவறுதலாக ஒரு ரூபாயை இழப்பது கூட எரிச்சலடைய செய்யும். இதை படிக்கும் பலர் தங்கள் சட்டை அல்லது ஜீன்ஸில் இருக்கும் 100 அல்லது 500 ரூபாயை கவனிக்காமல் மறந்து துணியை துவைக்க போட்ட அனுபவத்தை பெற்றிருப்பீர்கள். கவனிக்காமல் தவறுதலாக செய்த இந்த செயலால் வேதனையையும் அனுபவித்திருப்பீர்கள்.

இதனிடையே கிரீஸ் நாட்டில் வியாபாரி ஒருவர் தவறுதலாக லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை குப்பை தொட்டியில் வீசிய அதிர்ச்சி சம்பவம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் எவ்வளவு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்திருப்பார் என்பதை யோசித்து பாருங்கள். இந்த சம்பவம் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம். கிரீஸ் வியாபாரி ஒருவர் தற்செயலாக 19,000 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.16 லட்சத்திற்கும் மேல் குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிரீஸ் நாட்டில் இருக்கும் லிமோஸ் என்ற தீவில் வசிக்கும் வியாபாரி ஒருவர் சமீபத்தில் பணம் நிறைந்த ஒரு பை மற்றும் குப்பைகள் நிறைந்த ஒரு பை என ஒரே நேரத்தில் 2 பைகளை எடுத்து கொண்டு வெளியில் கிளம்பி இருக்கிறார். தன் கடைக்கு போகிற வழியில் குப்பையை போட்டு விட்டு போகலாம் என்றெண்ணி 2 பைகளையும் ஒரே நேரத்தில் எடுத்து கொண்டு கிளம்பி இருக்கிறார். என்ன டென்ஷனில் இருந்திருப்பாரோ தெரியவில்லை குப்பை தொட்டியை பார்த்தும் ஏதோ நினைவில் தவறுதலாக குப்பை மற்றும் பணம் இருந்த 2 பைகளையும் குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றுள்ளார்.

தனது கடையை அடைந்த பிறகு, குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குப்பை பையுடன் பணம் இருந்த பையையும் தவறுதலாக வீசி விட்டதை உணர்ந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் குப்பை கொட்டிய பகுதிக்கு விரைந்து சென்று, குப்பை தொட்டியில் தேடி பார்த்த போது அங்கே அவர் வீசிய 2 பைகளையுமே காணவில்லை. இதனை கடும் அதிர்ச்சி அடைந்த அந்த வியாபாரி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து வியாபாரி அளித்த தகவலின் பேரில், போலீசார் அங்கிருந்து குப்பைகளை கொண்டு சென்ற லாரியை கண்டுபிடித்தனர். லாரி குப்பைகளை எரிக்கும் முன், போலீசார் அந்த குறிப்பிட்ட லாரியை மடக்கி பிடித்தனர்.

பணம் கிடைத்ததா.?

சம்பவம் பற்றி கூறி உள்ள வியாபாரி, குப்பையை ஏற்றி சென்ற லாரியை மடக்கி அதிகாரிகளுடன் சேர்ந்து குப்பைகளை கிளறி தேடிய போது சில நிமிடங்களிலேயே தான் தொட்டியில் வீசிய குப்பை அடங்கிய பையை கண்டுபிடித்ததாக குறிப்பிட்டார். எனவே தொடர்ந்து தேடினால் பணப்பையும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தேடியதன் பலனாக சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு குப்பைகளோடு குப்பையாக கிடந்த பணம் அடங்கிய பையை அதிகாரிகளின் துணையோடு கண்டு பிடித்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனக்கு மீண்டும் பணம் கிடைக்க உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கு அந்த வியாபாரி நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்