நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உருளைக்கிழங்கில் இத்தனை நன்மைகளா? ஆய்வில் வெளியான தகவல்

உணவின் ஒரு பகுதியாக வேகவைத்த அல்லது பிசைந்த உருளைக்கிழங்கை உட்கொண்டவர்களில் HEI மதிப்பெண்கள் 4.7 சதவீதம் அதிகம்.
உருளைக்கிழங்கு உட்கொள்வது இளம்பருவத்தில் உள்ளவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க உதவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு நிறைந்த உணவு உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை பார்க்கலாம்.

நீங்கள் உருளைக்கிழங்கு பிரியராக இருந்தால், இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. 9 முதல் 18 வயதுடையவர்களிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் உருளைக்கிழங்கு சாப்பிடுவது முக்கிய ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதை மிதமாக மேம்படுத்த ஒரு சிறந்த உத்தியாக செயல்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

9 முதல் 18 வயது வரையிலான தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தேர்வு கணக்கெடுப்பில் (NHANES) 2001-2018ல் பங்கேற்ற உணவு தகவல்களைச் சேகரித்தனர். பல ஊட்டச்சத்துக்களுக்கு, உருளைக்கிழங்கு நுகர்வு அதிகரிப்பதன் மூலம் உட்கொள்ளல் மற்றும் போதுமான அளவு மேம்பட்டது என்பதை கண்டறிந்தனர்.
முடிவுகள்:

உருளைக்கிழங்கு சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில், உணவின் ஒரு பகுதியாக வேகவைத்த அல்லது பிசைந்த உருளைக்கிழங்கை உட்கொண்டவர்களில் HEI மதிப்பெண்கள் 4.7 சதவீதம் அதிகம்.

ஃப்ரைடு உருளைக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்ட இளம் பருவத்தினரிடையே உருளைக்கிழங்கை உணவில் சேர்க்காதவர்களை விட HEI மதிப்பெண்கள் முறையே 2 சதவீதம் மற்றும் 1.6 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது

உருளைக்கிழங்கு நுகர்வுடன் ஒப்பிடுகையில், உருளைக்கிழங்கை எந்த வடிவத்திலும் சாப்பிடுவது (சுட்ட, வேகவைத்த, பிசைந்த மற்றும் வறுத்த) உடலில் நார் மற்றும் பொட்டாசியம் உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அதிக உட்கொள்ளலுடன் தொடர்புடையது என்று முடிவுகள் காட்டுகின்றன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்