நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காண்டாமிருக கொம்பின் NFT படம் 7000 டொலருக்கு ஏலம் போன அதிசயம்!

முதல் முறையாக காண்டாமிருக கொம்பின் NFT படம் கிட்டத்தட்ட 7000 டொலருக்கு ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உண்மையான காண்டாமிருகங்களைப் பாதுகாக்க பணம் திரட்டும் முயற்சியில் காண்டாமிருகத்தின் கொம்பின் NFT படம் முதல்முறையாக ஏலத்தில் விற்கப்பட்டது.

The world's first rhino horn NFT goes on auction in South Africa on Nov 11 to raise funding for conservation efforts. 

ஒரு கேப் டவுன் தொழிலதிபர் சார்ல் ஜேக்கப்ஸ் (Charl Jacobs) இந்த டிஜிட்டல் கொம்பிற்காக 105,000 ரேண்டுகள் (6,850 அமெரிக்க டொலர்கள்) செலுத்தி ஏலத்தில் எடுத்துள்ளார். அதை அவர் தனது குழந்தைகளுக்கான அறக்கட்டளையில் வைக்க திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய சார்ல் ஜேக்கப்ஸ், "காண்டாமிருகங்கள் முற்றிலும் சீர்குலைந்துபோகும் ஒரு மோசமான சூழ்நிலை வந்தால் கூட, நான் இன்னும் ஒரு காண்டாமிருகக் கொம்பை வைத்திருப்பேன், ஏனென்றால் NFT என்பது ஒரு நிஜ காண்டாமிருகக் கொம்பின் அடையாளமாகும்" என்று கூறினார்.

இந்த விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடிய 200 காண்டாமிருகங்களைக் கொண்ட தனியார் Black Rock Rhino பாதுகாப்பு அமைப்பிற்கு செல்லும்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், தென்னாப்பிரிக்காவில் வேட்டையாடுபவர்கள் குறைந்தது 249 காண்டாமிருகங்களைக் கொன்றுள்ளனர். இது 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருந்ததை விட 83 அதிகம்.

NFT என்றால் என்ன?

டிஜிட்டல் வரைபடங்கள், இசை மற்றும் வீடியோக்களில் மில்லியன் கணக்கான டொலர்களை குவிக்கும் கலை சேகரிப்பாளர்கள் மத்தியில் NFT-கள் பிரபலமாகி வருகின்றன.

NFT என்பது கலை, இசை, விளையாட்டுப் பொருட்கள், வீடியோக்கள் மற்றும் சில சமயங்களில் மீம்ஸ் போன்ற நிஜ உலகப் பொருட்களைக் குறிக்கும் டிஜிட்டல் சொத்து ஆகும்.

NFT-ன் நம்பகத்தன்மை பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் சான்றளிக்கப்பட்டது மற்றும் இதை ஓன்லைனில் வாங்கலாம் மற்றும் விற்கலாம். CoinDesk-ன் படி, நவம்பர் 2017 ஆனந்தின் பிற்பகுதியில் இருந்து NFT-களுக்காக 174 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்